82
 

189. ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்1
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.

(ப. இ.) ஆவி நீங்கிய உடல் ஊர்முனி பண்டமாகும். ஆவி நீங்கியதும் அவ்வுடம்பினைச் சூழ்ந்திருந்து உறவோடு ஊரெலாம் ஒன்று கூடி யழுவர். முறைப்பெயர் சிறப்புப்பெயர் முதலிய பெயர்களை ஒழித்துப் பிணமென்று பெயரிடுவர். பெயரிட்டு முட்செடியாகிய சூரையடர்ந்த சுடுகாட்டிற்குக் 'காலைக் கரையிழையாற் கட்டித்தாங்கை யார்த்து, மாலை தலைக் கணிந்து மையெழுதி - மேலோர், பருக்கோடி மூடிப் பலரழ' எடுத்துச் செல்வர். சென்று அவ்வுடம்பினை ஈமத்தேற்றி வாய்க் கரிசியிட்டுக் குடமுடைத்துக் கொள்ளி வைத்து எரிகொளீஇச் சுடுவர். சுட்டபின் நீரின் மூழ்கி இறந்தவரைப்பற்றியேனும் இனி இறக்கப் போகும் தம்மைப் பற்றியேனும், இதற்கு வாயில்களாகவுள்ள நிலையாமை, மாயை, வினை, மலங்களைப் பற்றியேனும் ஒரு சிறிதும் நாடாது நினைப் பொழிந்திருப்பர்.

(அ. சி.) சூரை - ஒருவகைச் செடி.

(3)

190. காலும் இரண்டு முகட்டலக் கொன்றுள
பாலுள் பருங்கழி முப்பத் திரண்டுள
மேலுள கூரை பிரியும் பிரிந்தால்முன்
போலுயிர் மீளப் புகஅறி யாதே.2

(ப. இ.) உடம்போடு கூடிய உயிர் உறையும் இல்லம்போல் இவ்வுடம்பினையும் ஓர் இல்லமாக உருவகிக்கின்றனர். காலிரண்டு, முகட்டுச் சட்டம் ஒன்று, பக்கத்திலுள்ள பெரிய கழிகள் முப்பத்திரண்டு, மேலுள்ள கூரை ஒன்று ஆகியவற்றோடு கூடிய உடம்பு ஓர் இல்லமாகும். இவ் வில்லத்தில் ஆவி நீங்குங்கால் உச்சித்துளை வாயிலாக வீங்கற் காற்று நீங்கப் பிரியும். பிரிந்தால் முன்போல் உயிர் அவ் வுடலகத்துப் புகும் வாயில் அறியாது. வீங்கற்காற்று - தனஞ்சயன். நம்முடைய கால் களிரண்டும் வீட்டின் முகட்டுச் சட்டம் அமைக்கும் இரண்டு கால்களை ஒக்கும். முதுகெலும்பு முகட்டுச் சட்டத்தினை ஒக்கும். கழிகள் முப்பத்திரண்டும் இருபக்கங்களிலும் முதுகெலும்புடன் பொருந்தி இணைக்கப்பட்ட முப்பத்திரண்டு எலும்புகளை ஒக்கும். மேலுள்ள கூரை தலைமயிரினை ஒக்கும்.

(அ. சி.) பாலுள் - பக்கங்களில், விலாவில்.

(4)

191. சீக்கை விளைந்தது செய்வினை மூட்டிற்ற
ஆக்கை பிரிந்த தலகு பழுத்தது
மூக்கினிற் கைவைத்து மூடிட்டுக் கொண்டுபோய்க்
காக்கைக்3 குப்பலி காட்டிய வாறே.


1. மணமென. ஆரூரர், 8 - 6.

" தொட்டுத் 11. ஐயடிகள். 8.

2. கால்கொடுத் அப்பர், 4. 33 - 4.

" கால்கொடுத் தெலும்பு. அப்பர், 4. 67 - 3.

3. பூக்கைக்கொண். " 5. 90. 5.