1116
 

களும் பிண்டத்துள் இடைகலை பிங்கலை நாடிகளுமாகும். இலங்கைக் குறியுறும் - இலங்கையில் மேருவின் குறியைப் பார்க்கலாம். (இதனால் மேருமலை திருமூலர் காலத்திலேயே அழிவெய்திவிட்டது என்பது போதருகின்றது.) மேரு - சுமேரு - குமேரு - என மூன்றாம். மேரு - பூமத்தியரேகையும் - பூமியின் அச்சரேகையும் கூடும் இடம்; அதுதான் இலங்கை. சுமேரு -வடதுருவம் (N. pole). குமேரு - தென்துருவம் (S. pole). தில்லைவனம் - மலயம் இவை பூமியின் நடுநாடி (Axis) யில் இருக்கின்றன என்பதை இம் மந்திரம் குறிக்கின்றது.

(9)

2702. பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலையொண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு வம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையி னீறன்றே.

(ப. இ.) பூதமேரு எனப்படும் வடபாலுள்ள பொன்மலையும் தெக்கணப்புறத்ததான இலங்கையும் முறையே இடைகலை பிங்கலை எனப்படும். இவ் விரண்டன் நடுவணதாகக் காணப்படும் திருத்தில்லை நடுநாடியாகிய சுழுனையாகும். பாதிமதியாகிய ஆருயிர் ஐந்தெழுத்தின் நடுவண் நிற்கும் 'ய'கரத்தால் பெறப்படும் ஆவியேயாம். அதனையே சிவபெருமான் சூடியருளினன். அவ் வுண்மை "முடி 'ய'ப்பார்" (2271) என்னும் உண்மை விளக்கத் திருப்பாட்டான் உணரலாம். அப் பாதிமதி சூடிய சிவபெருமான் இத் தில்லையின்கண் (2361) இடையறாது திருக்கூத்தியற்றி யருளுகின்றனன். குற்றமற்ற இந் நிலவுலக அண்டத்து எல்லையும் அவ் வெல்லையிரண்டும் நடுவண் வந்து முற்றுறும் நடுக்கோடு திருத் தில்லையாகும். சிவபெருமானின் திருத்தலை அன்பியலாகும். திருவடி அருளியலாகும். ஆருயிர் அன்பியலின்வழிப் பாதிமதியாக விருக்கும். அருளியலின்வழி முழுமதியாகும். பாதிமதி யாங்கால் ஆருயிர் சுட்டுணர்வும் சிற்றுணர்வுமாக இருக்கும் முழுமதியாங்கால் அவ் வுயிர் முற்றுணர்வாக விருக்கும் சுட்டுணர்வு நிலையில்லாத உலகியல் இன்பமாகும். சிற்றுணர்வு நிலையில்லாத உலகியற் பொருளாகும். இவ்விரண்டின் சார்பாம் வடிவம் பொருள் வடிவமாகும். முற்றுணர்வு நிலையுடைப் பொருளும் நிலையுடை இன்பமும் பற்றியதாகும். இவ் விரண்டின் சார்பாம் வடிவம் அறிவியல்பால் பெறப்படும் அன்பு வடிவமாகும். பொருள் வடிவினைப் பிறை யெனவும், அறவடிவினை ஆனேறெனவும் உருவகிக்கப்படும். இவ்வடிவங்களெல்லாம் ஆருயிர்களின் உளப்பண்பை முகமெனக் கூறும் உருவகமேயாம். அதனை வரும் வெண்பாவால் நினைவு கூர்க:

'ஆணவ மாமெருமை ஆனைகரி ஆம்மருள்காண்
ஏணஅரி மாவினையாம் ஏர்பரியும் - ஆண்மார்
நற்செறிவாம் வெள்ளானை ஞானமாம் ஆனேறும்
இற்புகலன் பின்புருமேல் எண்.'

அறிவு நிரம்புவதன் முன் பெற்றோர் பிள்ளையினைத் தம் தோளிலோ, இடுப்பிலோ, ஓரோவழித் தலையிலோ தங்கி இருக்குமாறு செய்வர். அறிவு நிரம்பியபின் பெற்றோர்தம் திருவடியிலே அவ்வடிவினைச் சிறந்த அணியெனப்பூண்டு முடிமிசைக் கொண்டு வழிபட்டுத் திருந்திய நன்னெறி சேர் மக்கள் தங்கி யிருக்கும். அது திருவள்ளுவ நாயனாரருளிய,