(ப. இ.) உலகை உய்விக்கும் மழை வானத்தினின்றும்ஒலிக்கின்றது. அதுபோல் இறைவனும் இந்நாள் நம்மைஅருளால் அழைப்பனோ என்று தயங்குவர். ஆன் கன்று தன்தாய்ப் பசுவை நினைந்துருகி அழைப்பது போல், யானும்என் நந்தியங் கடவுளை அன்பால் மனமுருகி ஓவாது அழைக்கின்றேன்.எது கருதியென்றால், அவன்றன் திருவடியுணர்வைப் பெறுதற்பொருட்டேயாம். (அ. சி.) வானின்றழைக்கும் மழை -உலகர் வேண்டாது தானே பெய்யும் மழை. ஆனின்றழைக்கும்- ஆன் கன்று தாய்ப்பசுவை அழைக்கும். (30) 31. மண்ணகத் தான்ஒக்கும்வானகத் தான்ஒக்கும் விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும் பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே. (ப. இ.) மண்ணகத்தும் வானகத்தும்விண்ணகத்தும் முறையே வாழ்வார் மக்கள், தேவர் முதலியமூவர், அருளோன் முதலிய ஐவர் ஆவர். அவரவர்களுக்கு வேண்டுவனஅருளுவதால் அவரவர்களை ஒப்பவன்போல் தோன்றுவன்.ஆயினும் அவன் அவர்களனைவர்களையும் இரும்பைப்பொன்னாக்கும் குளிகையனைய வேதகத்தானாவன். அவன்செந்தமிழ்ப் பண்ணகத்து இன்னிசை போன்றுள்ளவன்.அப் பாடலினை ஏற்று அளவிலா மகிழ்வு பூப்பவன். அவன்என் அறிவின்கண்ணே நிறைந்து நிற்கின்றான். யானும்அவனருளால் அவ் வறிவின் கண்ணேயே காதலிக்கின்றேன்.மூவர்: அயன், அரி, அரன்; ஐவர்: ஆசான், ஆண்டான்,அருளோன், அன்னை, அத்தன். (அ. சி.) மண்ணகத்தான் - பூமியில்உள்ளவனாயினும். வானகத்தான் - இந்திர உலகத்துள்ளவனாயினும்.விண்ணகத்தான் - இந்திர உலகத்தைத் தவிர ஏனையபிரம, விண்டு, உருத்திர, மகேசுர, சதாசிவ உலகத்தானாயினும்.வேதகத்தான் - மண் - வான் விண்ணைத் தவிர்த்துநரக புவனங்களில் உள்ளவர்களாயினும். கண்ணகத்தேநின்று - ஞான வடிவாய் நின்று. (31) 32. தேவர் பிரான்நம்பிரான்திசை பத்தையும் மேவு பிரான்விரி நீருல கேழையுந் தாவு பிரான்தன்மை தானறி வாரில்லை பாவு பிரான்அருட் பாடலு மாமே. (ப. இ.) சிவபெருமான் தேவர்கட்கு முதல்வன்;எளியோமாகிய நமக்குத் தலைவன். பத்துப் புலங்களையும்கலப்பால் ஒன்றாய்ப் பொருந்தியிருக்கும் தலைவன்.கடலால் சூழப்பட்ட ஏழுலகையும் பொருட்டன்மையால்கடந்து நிற்கும் கடவுள். இத்தகைய அவன்றன் வியத்தகுதன்மையை உள்ளவாறு உணர்வாரில்லை. செலுத்துந் தன்மையால்எங்கும் நிறைந்து விளங்கும் அச் சிவனைச் செந்தமிழ்ப்பாடல் பாடித் தொழுவோமாக. புலம் - திசை. (32)
|