802
 

யெச்சங்களையெல்லாம் பொருள் எளிதாகவும் இனிதாகவும் விளங்குதற் பொருட்டு முற்றாக்கி யுரைத்தனம். தொழில் உம்மையையும் அங்ஙனமே உரைத்தனம். இதன்கண் இட்டு மீட்டு ஊட்டி இட்டு ஊட்டி உற்று என வினையெச்சம் ஆறும், தாழ்த்தல் மீட்டல் நாட்டல் வைத்தல் எனத் தொழில் உம்மை நான்கும் காணப்படும். இப் பத்துமே முத்தன் ஆக்கும் முத்தன்செய்கை என்க. ஆறு எச்சங்களும் ஆறு குணங்களையும் ஆறு நெறிகளையும் குறிக்கும் குறிப்பாகும். நான்கு உம்மைகளும் நான்கு துறைகளையும் பேறுகளையும் குறிக்கும் குறிப்பாகும். இத் திருப்பாட்டுக்கு முற்றும் அமைந்த எடுத்துக்காட்டாக இருப்பது திருவைந்தெழுத்தில் நடுவாம் யகர நிலையாம் நம்பியாரூரர் (1771) திருவரலாறாகும். 'சிவயசிவ' என்னும் திருவைந்தெழுத்தில் முறையே ஆளுடைய பிள்ளை அரசு நம்பி அடிகள் மூலர் என்னும் செந்நெறி முதல்வர் ஐவரையும் அமைத்து அன்பு பூண்டு ஒழுகுதல் இன்பம் வேண்டுவார்க்கியல்பாம் என்க. இதனை வரும் வெண்பாவால் நினைவுகூர்க:

"ஆளுடைய பிள்ளை அரசுநம்பி யாரடிகள்
கேள்மூலர் ஐவரும் கேடிலா - வாள்மிக்க
ஐந்தாம் 'சிவயசிவ' அத்தமிழின் ஆரமைவா
வந்தார் திருவருளால் வாழ்த்து."

(அ. சி.) மீட்டூட்டி - அதினின்றும் திருப்பிப் போகங்களைப் புசிப்பித்து. தானத்துளிட்டு - புவனங்களில் இருத்தி. நாட்டல் - நிலை பெறுவித்தல்.

(13)

2024. அத்த னருளின் விளையாட் 1டிடஞ்சடஞ்
சித்தொ டசித்தறத் தெளிவித்த சீவனைச்
சுத்தனு மாக்கித் துடைத்து மலத்தினைச்
சத்துட னைங்கரு மத்திடுந் தன்மையே.

(ப. இ.) சிவபெருமான் செய்தருளும் திருவைந்தொழிலின் திருவினையாட்டிடம் ஆருயிர்களின் உடம்பாகும். அறிவுடையன விவை அறிவில்லன இவை என ஆருயிர்கட்கு அறிவித்து அவ் வறிவினால் தெளிவிக்கப்பட்ட செவ்வியுயிரை மலம்நீக்கி அருளுகின்றனன். உண்மைப்பொருளாகிய தன்வண்ணம் ஆக்குகின்றனன். இவையே திருவைந்தெழுத்தின் சிறப்பால் பெறப்படும் பேரின்பப்பேற்றினுக்கு வாயிலாகிய திருவைந்தொழிலாகும்.

(அ. சி.) சடம் - தேகம். சத்துடன் - சிவத்துடன். ஐங்கருமம் - ஐந்தொழில்.

(14)

2025. ஈசத்து வங்கடந் தில்லையென் றப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும்2 அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை யெல்லாந் தெளியவைத் தானே.


1. ஏற்றவிவை. சிவப்பிரகாசம், பொது. 6.

2. பாவிக்கின். " 10.7.