இதனுள், 'கொலை யென்பது, அறிவும் புகழும் முதலாயினவற்றைக் கொன்றுரைத்தல்.' எண்குணன் - எண்ணத்தக்க சிறந்த குணமுள்ளவன். பகுந்துண்பான் - எல்லாமுடையவன் சிவன்; நம்பாலுள்ள பொருளும் அவனுக்கே உரிய உடைமை; எல்லா உயிர்களும் அவன் மக்கள் என்னும் இவ் வுண்மையுணர்ந்து தன்பாலுள்ளனவற்றை அன்புடன் குறிப்பறிந்து முகமலர்ந்து இன்மொழி புகன்று நன்றாற்றிக் கொடுத்து வந்தோன் பகுந்துண்பான் எனப்படுவன். (அ. சி.) எண்குணன் - எண்ணும் குணன் - எல்லாராலும் மதிக்கப்படும் குணமுடையவன். (2)
3. நியமம் (நன்றாற்றல்) 537. ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச் சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப் பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன் நீதி யுணர்ந்து நியமத்த னாமே.1 (ப. இ.) எல்லாவற்றுக்கும் முழுமுதலாய்க் காரணமாயிருப்பவன் ஆதி. செந்தமிழ்மறையும் அந்தமில் பொருளுமாய் விளங்குபவன் சிவன். அகன்ற அறிவுப் பேரொளியாகவுள்ளவன் அவனே. சுடுந் தீயாகவுள்ளவனும் அவனே. திருமேனி யொருகூறு பெண்கூறாகத் திகழ்பவனும் அவனே. திருவருளால் இவ்வுண்மையுணர்ந்தோன் நீதி யுணர்ந்தோனாவன். பாதியுள் - திருமேனிக்கண் ஒருபாதியில். நீதி யுணர்ந்தான் - திருவருளால் முறைப்படி கண்டு வணங்கினவன். நியமத்தான் - அகத்தவத்தோன். அகத்தவம் - யோகம். (1) 538. தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை காமங் களவு கொலையெனக் காண்பவை நேமியீ ரைந்து நியமத்த னாமே2. (ப. இ.) அகம்புறம் தூய்மை. அருள், ஊண் முதலியன சுருக்கிச் சிக்கனவாழ்வு, பொறுமை, செம்மை வாய்மை, நிலைமை (மானம்), காமமகற்றல், களவகற்றல், கொலையகற்றல் ஆகிய பத்தும் நன்றாற்றும் பண்பாகும், ஊண் சுருக்கம் வரும் திருவள்ளுவர் திருப்பாட்டானுணர்க. "இழிவறிந் துண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய்." - 946.
1. ஆதியானை. அப்பர், 5. 94 - 6. 2. ஈசனுக்கன். சிவஞான சித்தியார், 12. 2 - 1. " தன்னைத்தான். திருக்குறள். 209.
|