916
 

யான் எனது என்னும் செருக்கற்று எங்கும் நிறைந்த பொங்குபேரருட்பங்கனாகிய சிவபெருமான் பெருநிறைவில் அழுந்தல் சிவக் காட்சியாகும். காட்சி - தரிசனம். படர்வற்ற - செயலற்ற; ஒட்டற்ற - நினைவற்ற.

(அ. சி.) கேவலம் - தத்துவங்களோடு சேராதநிலை. கலவ - பொருந்த. சகலம் - தத்துவங்களோடு கூடிய நிலை. தனைக்காண்டல் - ஆன்ம தரிசனம். மூன்றும் - ஆன்ம தரிசனம், பரை தரிசனம், சிவ தரிசனம்.

(1)

2264. வெல்லும் அளவில் விடுமின் வெகுளியைச்
செல்லும் அளவுஞ் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினாற்
கல்லும் பிளந்து கடுவெளி யாமே.1

(ப. இ.) எல்லாம் ஒறுக்கும் மதுகை உடைய உரனுடையாளராக இருந்துகொண்டு செல்லிடத்தும் சினங்கொள்ளாது விடுங்கள். உங்களுடைய முழுநாட்டத்தையும் விழுமிய முழுமுதற் பெரும்பொருளாம் சிவபெருமானிடத்து இடையறாது செலுத்துங்கள் 'எங்கெழிலென் ஞாயிறு எமக்கு' என்பதுபோல் அல்லும் பகலும் திருவருளுடனே தங்கிச் சிவபெருமானை இருநோக்காலும் நோக்குங்கள். அங்ஙனம் திருத்தொண்டு புரிந்தால் செருக்கென்னும் அகங்காரக்கல் அருளால் பிளக்கும். திருவருளின் அறிவுப்பெருவெளி திறக்கும் இந் நிலையினை இம்மையே எய்திய செம்மை அம்மையாளர் திருக்கண்ணப்பநாயனாராவர். இவ் வுண்மை வரும் சேக்கிழாரடிகள் திருவருளானுணர்க:

"இப்பரிசு திருவமுத செய்வித்துத் தம்முடைய
ஒப்பரிய பூசனைசெய் தந்நெறியில் ஒழுகுவார்
எப்பொழுதும் மேன்மேல்வந் தெழுமன்பால் காளத்தி
அப்பரெதிர் அல்லுறங்கார் பகல்வேட்டை யாடுவார்."


(12. கண்ணப்பர். 151.)

அம்மையாளர்: திருவடிப்பேற்றுக்குரியர்.

(அ. சி.) கல்லும் - அகங்காரம் என்னும் கல்லும். கடுவெளி - பரம ஆகாயம்.

(2)

நின்மலாவத்தை

2264. ஊமைக் கிணற்றகத் துள்ளே யுறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையி னுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே

(ப. இ.) எண்ணம் சொல் செயல்கள் ஏதும் நண்ணாத் தூயநிலை நின்மலாவத்தை என்பர். அந் நிலையினை ஊமைக்கிணறு என்று உருவகித்து ஓதியருளினர். ஆருயிர் கருவிகளுடன் கூடிக் கருத்தைச் சிவன்பால் இருத்தி ஏனை அகப்புறச் செயலற்று இருக்கும் நல்லோர்


1. காராரும். தாயுமானவர், 8. ஆனந்தமான பரம் - 6.