24
 

மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமான் தூமாயைக்கண் வைகும் அயன்மாலிருவரையும் தமரெனக் கொள்வர். இம் முறைமை அறிந்து அவரையும் தொழுக. அவரால் ஆம் நன்மையினையும் பெறுக.

(அ. சி.) வயன் - பயன் "வகரம் பகரமுமாகும்" என்ற சூத்திரப் படி. (உ-ம்: வலம் - பலம்.)

(5)

56. ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன்தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடென் றானே.

(ப. இ.) உலத்தலாகிய அழிவில்லாத சிவபெருமானைத் தேவர்கள் கூட்டமாகக் கூடிப் பாலொத்த மேனியனே என்று வழிபட்டனர். அடியேனும் தொழுது காக்கும் மாலுக்கும் படைக்கும் நான்முகனுக்கும் திருவாணை நல்கிப் பெயரொற்றுமையும் காட்டியருளியவன் நீயே என்று விண்ணப்பித்தேன். அச் சிவபெருமான் இம் மாநிலத்து நம் திருவடி யொன்றையுமே நீ விரும்புக என்றருளினன். நல்கிடு - விரும்பு.

(அ. சி.) உலப்பிலி - அழிவில்லாத சிவன்.

(6)

57. வானவர் என்றும் மனிதர்இவர் என்றும்
தேனமர் கொன்றைச் சிவனருள் அல்லது
தானமர்ந் தோருந் தனித்தெய்வம் மற்றில்லை
ஊனமர்ந் தோரை உணர்வது தானே.

(ப. இ.) தேன் நிறைந்துள்ள கொன்றைமாலை யணிந்த சிவபெருமான் காத்தளித்தருளும் உடம்பு வேறுபாட்டாலேயே அவர் வானவரென்றும் இவர் மனிதரென்றும் பெயர் பெறுவாராயினர். அது வல்லாமல் வேறொரு சிறப்பும் உயிர்வகையான் இல்லை. எல்லாராலும் விரும்பி நினைந்து துணியும் தனித்தெய்வம் ஒப்பில்லாத சிவபெருமான் ஒருவனே; வேறில்லை. உடலினை விரும்பி அதன்கண் பொருந்தி வாழ்வோர் ஐ என்று சொல்லப்படும் தலைமைப்பாடமைந்த சிவபெருமானை யுணர்வதே பிறவிப்பெரும்பேறாகும்.

(7)

58. சோதித்த பேரொளி மூன்றைந் தெனநின்ற
ஆதிக்கண் ஆவ தறிகிலர் ஆதர்கள்
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன்என்று
பேதித் தவரைப் பிதற்றுகின் றாரே.

(ப . இ.) சோதித்த - ஒளியருளுகின்ற சிவபெருமானின் பேரொளியாய்த் திகழ்வன அன்பு, அறிவு, ஆற்றல் (சத்தி, சிவம், விந்து) களாகிய மூன்றுமேயாம். அன்பின் இவ்வொளி பெற்றுப் பேரொளியாய்