285
 

வெளி, வளி, ஒளி, நீர், நிலம் என்னும் ஐம்பெரும் பூதங்களுக்கும் முறையே பகுக்கப்படின் காலைமுதல் அவ்வாறு நாழிகைகளாகும். ஆறு நாழிகைக்கும் விநாடி முந்நூற்று அறுபதாகும் எனவே ஒவ்வொரு பூதங்கட்கும் முந்நூற்றறுபதுவிநாடி உரிய காலமாகும். அக் காலம் அவ்வப்பூதப்பெயரான் வழங்கப்படும். எடுத்துக்காட்டாகக் காலை ஆறு நாழிகையும் வெளியாகிய வான்காலம் எனப்படும். அப்படியே மற்றவற்றையும் கூறிக் காண்க. இது தோற்றமுறை. எண்ணி மண் முதலாகத் தேர்ந்தறியின் அஃது ஒடுக்கமுறையாகும். இம் முறையாகவே இரவு முப்பது நாழிகையையும் அமைத்துக்கொள்க. நாளுக்கும் நாழிகைக்கும் ஒவ்வொன்றாக ஓதியுய்ய அப்பரடிகள் அருளிய 'சித்தத்தொகைத் திருக்குறுக்குறுந்தொகை'த் திருப்பாட்டு முப்பதும் காண்க. இஃதும் அகரவரிசையின் அமைந்துளது.

(அ. சி.) காலம் - விநாடி. 60 விநாடி - ஒரு நாழிகை. 360 காலம் - 360 விநாடி; ஆறு நாழிகை. ஒரு பகலுக்கு 30 நாழிகை, அதனை 5 பங்கு ஆக்க. ஒவ்வொரு பங்கையும் முறையே வான் முதலாகக் கொள்க. வான் - வளி, தீ, நீர், நிலம் 'வான் முதலாயிட' என்றார். இது தோற்ற முறை. நிலம் முதலாகக் கொள்ளின் ஒடுக்கமுறை என்க. இதனை, "மண்முதற் றேர்ந்தறிவார்" என்றார். இவ்வாறே இரவையும் 5 பங்கு ஆக்கிக்கொள்க.

(12)

632. சித்தந் திரிந்து சிவமய மாகியே
முத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்
சுத்தம் பெறலாம் ஐந்தில் தொடக்கற்றோர்
சித்தம் பரத்தில் திருநடத் தோரே.

(ப. இ.) எண்ணமாகிய சித்தம் புலன்களாகிய சுவையொளி ஊறு ஓசை நாற்றங்களிற் பற்றாமல் மடங்கிச் சிவத்தின்பாற் பற்றுமேல் அது சிவமயமாகும். இங்ஙனம் அமைவதற்கு எண்மையும் திண்மையும் உண்மையும் ஆயவழி செம்பொருளின் இம்பரிடைக்காணும் உம்பரும் உணராத் திருவுருவ வழிபாடேயாம். அத் திருவுருவ வழிபாட்டினுள்ளும் அம்பலவாணர் வழிபாடே ஐம்புல நுகர்வுக்குப் பெரிதுமொத்த திருக் குறிப்போடு பொருந்திய திருவுருவமாகும். அது வலது திருக்கையில் காண்பது உடுக்கையாகிய துடி. இது படைத்தல், வான்நிலை காதுப்பொறி. வலப்பால் அமைவுத் திருக்கை காத்தல், வளிநிலை, தோல்பொறி. இடப்பால் திருக்கையில் அங்கி துடைத்தல், தீநிலை; நோக்குப்பொறி. ஊன்றிய வலப்பால் திருவடி மறைத்தல், மண்நிலை; மூக்குப்பொறி. தூக்கிய திருவடி அருளல், நீர்நிலை; நாக்குப்பொறி. இம் முறையான் ஐம்பொறியளவினும் 'கண்டு கேட்டு உண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள' (குறள் - 1101) என்பது போன்று நுகர்வுண்டாகும். அவ் வுண்மை வரும் சேக்கிழாரடிகளின் வாய்மொழியான் உணர்க. திருவுருவும் - படிமை; விக்கிரகம்.

"உணர்வி னேர்பெற வரும்சிவ
போகத்தை யொழிவின்றி யுருவின்கண்
அணையும் ஐம்பொறி யளவினும்
எளிவர அருளினை எனப்போற்றி