மகனாராதல் வேண்டும். அதுவே இறவாத இன்பப் பிறப்பாகும். இன்பப் பிறப்பென்பது சிவனடி மறவா அன்புத் திருவுள்ளத்துடன் இருப்பது. அத்தகையாரே தொண்டராங் குணமிக்காராவர். அவ் வுண்மை வரும் சேக்கிழாரடிகள் மறைமொழியா னுணரலாம்: "நின்றாலும் இருந்தாலும் கிடந்தாலும் நடந்தாலும் மென்றாலும் துயின்றாலும் விழித்தாலும் இமைத்தாலும் மன்றாடும் மலர்ப்பாதம் ஒருகாலும் மறவாமை குன்றாத குணமுடையார் தொண்டராங் குணமிக்கார்." 12. பத்தராய்ப் பணிவார், 7. குணமிக்கார் என்பது முக்குணங்கடந்து சிவனார் எண்குணத்தே கிடந்து வாழ்பவர். அவர்தம் மறவாச் சிவனினைவாகிய ஈறில் இன்பத்துளே பிறந்தவராவர். அத்தகைய மெய்யடியார் அருட்சார்பை விட்டு அகலாது ஒழுகுவர். அதனால் அவர்கள் அவ் வின்பத்திலே வளர்கின்றவராவர். உடைபோன்றிருப்பது சிவமணி. உடல்போன்றிருப்பது திருவெண்ணீறு. உயிர்போன்றிருப்பது திருவைந்தெழுத்து. இம் மூவகையாலும் யாவர்க்கும் சிவனை மறவா இன்பநினைவு உண்டாகும். அவ் வகை இன்பத்துள்ளே உறுதியுடனின்று நினைக்கின்றவர்களும் அவ்வின்பப் பிறப்பு எய்திய மெய்யடியார்களேயாவர். இத்தகையோரைக் கேட்டும் கண்டும் இச் சிறப்பினை மறந்து மருளுகின்றனர் சிலர். அம் மருட்சியால் சிலர் துன்பத்துளே தொடக்குறுகின்றனர். அத் தொடக்கினால் சோறும் கூறையும் வேண்டித் துன்பத்துள்ளே சிலர் தூங்கிச் சோர்கின்றனர். தூங்குதலென்பது வேறு எவ்வகை யுணர்வும் எழாது ஏதாவது ஒன்றிலே ஆழ்ந்து தங்கிவிடுதல். "உடையாம் சிவமணி ஒண்மையுடல் நீறாம் நடையுயிரும் ஐந்தெழுத்தாம் நாடு." என்பதனை நினைவுகூர்க. (அ. சி.) இன்பம் - சிவம். மறந்து - மயங்கி. சோறொடுங் கூறை - சோற்றுக்கும் துணிக்குமாக. (6) 2052. பெறுதற் கரிய பிறவியைப் 1பெற்றும் பெறுதற் கரிய பிரானடி 2பேணார் பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே. (ப. இ.) 'மானுடத் துதித்தல் கண்டிடிற் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்' என்பது தமிழாகம ஒத்தாகலின் மானுடப் பிறவியிற் பிறக்க நேர்ந்தார் அனைவர்க்கும் மாறின்றி மேலோதிய இன்பம் வந்து எய்துதல் ஒருதலை. அத்தகைய பெறுதற்கரிய மானுடப் பிறவி
1. அண்டசஞ். சிவஞானசித்தியார், 2. 4 - 17. " உரைசேரு. சம்பந்தர், 1. 132 - 4. 2. தூண்டு. தவ. 12. திருநாவுக்கரசர், 46. " அரியானை. அப்பர், 6. 1 - 1.
|