842
 

அருளோன் என்ப. இக் குறிப்பே 'விமலன்மெல்ல அகத்தில் விளையாடுதல்' என்றலும் ஒன்று.

(அ. சி.) நல்ல.....கள் - பரிசுத்தமான மனம் வாக்குக் காயம் உடையவர்களிடம். அல்ல...தே - ஐம்பொறி அடக்கமும் அந்தக்கரண சுத்தமும் இல்லாதவர் பசித்தமுகத்தை யுடையவர், அஃதாவது வருந்துவர்.

(17)


2. உடல் விடல்

2100. பண்ணாகுங் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் உடலிற் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

(ப. இ.) இனிமையமைந்த சொல்லையும், சிறந்த உயிர்ப்பு விளங்கிய செயலையும் இவற்றுடன் பொருந்தும் மனத்தையும் கொண்டுள்ளது துன்புக்கு உறையுளாகிய உடம்பு. அவ்வுடம்பகத்துத் தங்கும் உயிர் அவற்றின்வழி உலகிடைச் செல்லாது. அவற்றைக்கொண்டு மேனோக்கிப் பார்த்தல்வேண்டும். அஃதாவது சிவபெருமான் திருவடியிணையினையே தூயவுள்ளத்துடன் நினைத்தலும் புகழ்தலும் போற்றலுமாகும். அங்ஙனம் செய்வார்க்கு அவ்வுடம்பின்கணுள்ள பற்று அப்பொழுதே அழியும். அண்ணாந்து: இஃதோர் அரிய வழக்குச் சொல்.

(அ. சி.) பண் - இனிமை. அண்ணாந்து பார்க்க - ஆராய்ந்து பார்க்க.

(1)

2101. அழிகின்ற வோருடம் பாகுஞ் செவிகண்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக் குறுதுணை யில்லையே.

(ப. இ.) உடம்பைவிட்டு ஆருயிர் நீங்குங் காலத்துச் செவி கண் முதலிய உறுப்புகள் செயலற்று அழியும். அக்காலத்துப் புரியும் நோன்பினாலும் தானங்களினாலும் எவ்வகையான துணையும் அவ்வுடலினுக்கோ உயிரினுக்கோ வருவதில்லை. எனவே சிவபெருமானே உறுதுணையாவன். இவ்வுண்மை வரும் அப்பர் அருண்மொழியான் உணரலாம்.

"உற்றா ராருளரோ-உயிர்
   கொண்டு போம்பொழுது
 குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்கு
   உற்றா ராருளரோ

(அப்பர், 4. 9 - 10.)

மேலும், திருவள்ளுவனாரும் 'நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை, மேற்சென்று செய்யப்படும்' என்றதுங் காண்க.

(2)