901
 

பிரிவேயாகும். அவ் வருட்பெரும் திருவைப் பேரறிவுப் பெரும்திரு என்ப. இதுவே ஞானசத்தி. இதனைப் பராசத்தி எனவும் கூறுப. ஆருயிர்கள் உடம்பால் ஆற்றல் எய்துகின்றன. ஆற்றலால் நல்லொழுக்கில் ஒழுகும். ஆறு - நல்லொழுக்கம்.

(அ. சி.) சாந்தி - விருப்பு, வெறுப்பு இன்றி இருத்தல்.

(2)

2232. ஆறாறுக் கப்பால் அறிவார் அறிபவர்
ஆறாறுக் கப்பால் அருளார் பெறுபவர்
ஆறாறுக் கப்பால் அறிவாம் அவர்கட்கே
ஆறாறுக் கப்பால் அரனினி தாமே.

(ப. இ.) அருஞ்சைவர் மெய் (2139) ஆறாறு என்று சொல்லப்படும் முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாலுள்ளது யாது என அறிபவர் மெய்ப்பொருள் உண்மையறிபவராவர். அவரே அப்பாலுள்ள நிறைந்த திருவருளையும் பெறுபவராவர். அருளார் என்பது ஆர் அருள் என நிலைமாறிக் கொள்ளப்பட்டது. முப்பத்தாறு மெய்களுக்கும் அப்பால் திகழும் மெய்ப்பொருளாம் சிவபெருமானைத் திருவருள் துணையால் அறியும் அறிவே மெய்யறிவாகும். அவ் வறிவு கைவந்த நற்றவத்தோரே சிறப்புயிரினராவர். அவர்கட்கே அரன் உள்ளும் புறம்பும் தெள்ள இனிக்கும் தீங்கனியாவன். அத் தீங்கனியினை 'நமச்சிவாயப்பழம்' என நவில்வர் (2922) நம் நாயனார்.

இதனையே பட்டினத்துப்பிள்ளையார் "சேணுயர் மருதமாணிக்கத் தீங்கனி" என்றருளினர். அது வருமாறு :

"உழப்பின் வாரா . . . . . . . . . . . . . . . . . . .

17.கண்ணீ ரரும்பிக் கடிமலர் மலர்ந்து புண்ணிய
அஞ்செழுத் தருங்காய் தோன்றி நஞ்சுபொதி
காள கண்டமுங் கண்ணொரு மூன்றும்

20.தோளொரு நான்கும் சுடர்முகம் ஐந்தும்
பவழ நிறம்பெற்றுத் தவளநீறு பூசி
அறுசுவை யதனினும் உறுசுவை யுடைத்தாய்க்
காணினும் கேட்பினும் கருதினுங் களிதரும்
சேணுயர் மருத மாணிக்கத் தீங்கனி."

(11, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, 10.)

(3)

2233. அஞ்சொடு நான்குங் கடந்தக மேபுக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லிய லாளொடு
நஞ்சுற நாடி நயஞ்செய்யு மாறன்றே.

(ப. இ.) நான்கு வகையாகச் சொல்லப்படும் ஐந்து சுவையான: பூதம் ஐந்து, பூதமுதல் ஐந்து, பொறி ஐந்து, புலன் ஐந்து என்பன. பூதமுதல் - தன்மாத்திரை. அகக்கலன் என்று சொல்லப்படும் எண்ணம்