கொய்தும், இயல்பாகவே மாசற்ற பேரொளிப்பிழம்பாம் திருநீலகண்டப் பெருமானைப் பேராப்பெருங் காதல்கொண்டு வழிபட்டிருக்குங் கருத்தினை அவர் அறியாதவராவர் என்பதாம். நல்லார் - ஞானி. (அ. சி.) பாசிக்குளம் - கருப்பாயசம். (5) 1480. எவ்விடத் தும்பணி யின்மைகண் டுள்ளவர் எவ்விடத் தும்பணி யீசன் பணியென்றே அவ்விடத் தைங்கரு மத்தால் அறிதலால் உவ்விடத் தோருக்கோர் உபாய மில்லையே.1 (ப. இ.) திருவடி உணர்வுசேர் மெய்யடியார் எந்த இடத்தும் இறைவனையின்றித் தமக்கொரு பணியின்மை கண்டுள்ளவராவர். தாம் செய்யும் பணியனைத்தும் ஆண்டவன், அடிமையாகிய தம்மைக் கொண்டு செய்விக்கும் பணியென்றே நினைவர். இது 'நின்னடியேன் செய்பணிகள் நின்தொண்டே நின்னருளே. நின்னடிக்கே ஒப்புவித்தேன்' என்னும் உண்மையினை உணர்த்தும். அங்ஙனம் அம் மெய்யடியார் அறிவதூஉம் உலகமும், உலகத்தொழில்களும், உயிர்ச் செயல்களும் ஆண்டவன் ஐந்தொழிலின்கண் அடங்கும் உண்மையறிவதால் என்க; இதனையொழித்து எவ்விடத்தோர்க்கும் பேறெய்தும் வழிவகை வேறில்லை என்க. 'என்கடன் பணிசெய்து கிடப்பதே' என்னும் செந்தமிழ்ச் சிறப்பு மறையின் சீரிய பொருள் உலகிடை ஊர்ந்துசெல்ல ஊர்தி உழைப்பதற்குக் கருவி, உறைவதற்கு இல்லம் முதலியன தருவார்க்குக் கொடுக்கும் கூலிப் பணம்போன்றாகும் இதனை வருமாறு நினைவுகூர்க. ஊர உழைக்க உறையத் தருங்கருவிக் காரத் தருங்குறி யாரறியார் - சாரத் தருமுடற்கு நற்கோள் தருதல்சிவத் தொண்டே உருகுமனத் தன்ப ருரை. (6) 13. சாலோகம் (சிவனுலகம்) 1481. சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ் சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையான் மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம் பாலோகம் இல்லாப் பரனுரு வாமே.2 (ப. இ.) சிவவுலகம், சிவனண்மை, சிவனுருவம், சிவனாம் பெரு வாழ்வு என்னும் நான்கும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும்
1. சலமிலனாய். சிவஞானசித்தியார், 102 - 2 " நாமல்ல. சிவஞானபோதம், 10. 2 1 " நின்னையெப். அப்பர், 4. 113 - 4. 2. சன்மார்க்கம். சிவஞானசித்தியார் 8. 2 - 8.
|