(ப. இ.) மறை வழியாம் உலகியல் அறம் அறியார் அண்ணலாகிய சிவபெருமானின் திருவடியினை ஆராக் காதலுடன் நினையும் தீராத் திறமறியார். அறம் அறியார் என்பது அறத்தினைக் கருதவோ கூறவோ ஒருப்படார் என்பதாம். சிவவுலகமாகிய நிலையினையும் அறியார். இதற்குப் புறமாகிய வழிப்பேறாம் பதமுத்திகளையும் அறியார். பற்பல நெறியினர் மருளாற் கூறும் பொய்ம்மொழி கேட்டு மறமாகிய பாவ வழியில் ஒழுகுவார். அவர்க்கு வினைப்பகையும் அதன் விளைவாம் பிறவியும் எல்லையின்றி நிலைபெற்றுண்டாம். (அ. சி.) சிவலோகம் - புதன் அண்டம். புறம் - இதர பத முத்திகள். மறம் - துன்மார்க்கம். வகை - பிறப்பு இறப்பு. (3) 120. இருமலும் சோகையும் ஈளையும்1 வெப்புந் தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும் உருமிடி நாக முரோணி கழலை தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே. (ப. இ.) நீங்காத் துன்பத்தினைத் தரும் குத்திருமலும், குருதிக் குறைவாம் சோகையும், கோழையும், உடம்பெலாம் கொதிக்கும் உட்சூடும் இவை போன்ற பிறவும் நிலைபெற்ற நல்லறஞ் செய்யார்பால் நிகழ்வன. அச்சத்தைத் தரும் இடியும், கொடுநஞ்சுடைய நாகப்பாம்பும், உரோகிணி முதலிய விண்மீன்களும், பிளவைக் கட்டி முதலிய நோய்களும் நல்லறஞ் செய்வார்பால் வந்து சாரமாட்டா. (அ. சி.) சோகை - இரத்தமின்மை. ஈளை - கோழை. வெப்பு - உட்சுரம். (4) 121. பரவப் படுவான் பரமனை ஏத்தார் இரவலர்க் கீதலை யாயினும் ஈயார்2 கரகத்தால் நீரட்டிக்3 காவை வளர்க்கார் நரகத்தில் நிற்றிரோ நன்னெஞ்சி4 னீரே. (ப. இ.) மண்ணவர் விண்ணவர் முத்தேவர் முதலிய யாவர்களாலும் தொழப்படுவான் சிவபெருமான் ஒருவனே. அச் சிவபெருமானைப் பாடிப் பரவிப் பணியவும் மாட்டார். அற்றாராய் உற்று இறந்தவர்க்கு ஈயின் தலை யளவு சிறுபொருளைக்கூட ஈயவும் செய்யார். நீர்க்குட முதலியவற்றான் நீர் முகந்து எல்லார்க்கும் நல்ல பல பயன் தரும் சோலைகளை வளர்க்கார். அத்தகையோர் பெறும்பயன் யாதெனின் இருளுலகத் துன்பமேயாம். நெஞ்சினீரே நீரும் இவ்வகை நல்லறம் புரியாது நரகத்
1. கேளு அப்பர், 70 - 5. 2. முந்திச். ஆரூரர், 7. 60 - 4. " தாழ்வெனுந். " " 8 - 7. 3. (பாடம்) கரகத்தே நீராடிக். " காவளர்த்தும். 12. திருநாவுக்கரசர், 36. 4. (பாடம்) நாள்எஞ்சி.
|