53
 

திடை நிற்றிரோ? நாள் எஞ்சினீரே என்பதற்கு நல்லறம் புரியாது நாளை வீணாளாக்கிச் சாவை நெருங்கினீரே என்க.

(5)

122. வழிநடப் பாரின்றி வானோர் உலகங்
கழிநடப் பார்நடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற வோட்டிட்டு
ஒழிநடப் பார்வினை ஓங்கிநின் றாரே.

(ப. இ.) அறவழியில் நடவாதார் வானோர் ஒளியுலகினை எய்தார். முறை கடந்து அரும்பாவம் புரியும் கழிநடப்பார் இருளுலகஞ் சென்று துன்புற்றுக் கழிவர். கரும்பார் - கரியவுலகம்; இருளுலகம். அழிவினை உண்டாக்கும் வினையினையும் அதற்குக் காரணமான மலமாசினையும் அருளால் அறவே ஒட்டிட்டு, தீமைகள் முற்றும் ஒழிந்த நன்னெறியின் ஒழுகுவார் ஒழி நடப்பார் எனப்படுவார். நல்வினையாகிய அறச் செயலான் மேம்பட்டு நின்றார் என்க. மழி: முதனிலைத் தொழிற்பெயர்; அழித்தல். ஒழி நடப்பார். தீமையொழித்து நல்வழியில் நடப்பார்.

(அ. சி.) கழி நடப்பார் - வரம்பிகந்து நடப்பவர். கரும்பார் - நரகம். ஒழி நடப்பார் - சன்மார்க்கர்.

(6)

123. கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே.

(ப. இ.) உள்ளமுருகி ஈர நெஞ்சினராய் இரப்பவர்க்கு ஈயும் தாயனையார் சிவபெருமானின் திருவடியினைத் திருவருளால் அறிவுறக் காண்பர். திருவடியுணர்வு கைவந்த சிவனடியார்களைச் சிவனெனவே துணிந்து வழிபடுவோர் சிவவுலகினையடைவர். இவறன்மையுடையராய்ப் பொருட்பற்று மிக்கவர் நல்லறஞ் செய்யாமையால் வழித்துணை ஏதுமின்றி மாள்வர். சினத்தைப் பொருளென்று கொண்டு அச் சினத்தின்கண் மிக்குத் தீமை புரிந்தோர் துன்புற்று இருளுலகினில் வீழ்ந்தொழிந்தனர்.

(அ. சி.) கனிந்தவர் - ஈர நெஞ்சுடன் அறம் செய்தவர். துணிந்தவர் - துறந்தவர். மலிந்தவர் - ஆசை உள்ளவர்.

(7)

124. இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது1
முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.

(ப. இ.) ஆருயிர்கட்கு இன்ப துன்பங்களென இருவேறு வகைப்பட இறைவன் அமைத்தது அவ்வுயிர்கள் முன்பு செய்த நல்வினை


மறைக. சிவஞான சித்தியார், 2 - 2 - 27.

" இதமகி " " " - 10