74
 

(ப. இ.) மண்முதல் சிவம் ஈறாகச் சொல்லப்படும் முப்பத்தாறு மெய்களும் ஏணி போன்று பல படிகளையுடைய வழிப்பேறாகிய பதமுத்திக்கு ஏறும் வழிகளாகும். அவ்வழியாக அருளால் கடந்து சென்று தனக்குத்தானே ஒப்பாய்த் தன்னிகரின்றி விளங்கும் இயற்கை உண்மை அறிவுப்பேரின்ப உள்ளொளியோடு அருளால் உள்புக்குச் சொல்ல ஒண்ணாத சிவபெருமானைக் கண்டு திருவடி உணர்வால் தெளிவடைந்து அச் சிவனாகவே என்றும் ஒன்றுபோல் அமர்ந்திருந்தனர். மெய் - தத்துவம். அமர்ந்திருத்தல் - சிவன் நிறைவு ஒன்றினையே உணர்ந்து அதன்கண் அழுந்தியிருத்தல்.

(14)

171. இருந்தார் சிவமாகி எங்குந்தா மாகி1
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத் தியல்பைக் குறித்தங்கு
இருந்தார் இழவுவந் தெய்திய சோம்பே.

(ப. இ.) மேலோதியவாறே சிவமாகியிருந்த மெய்யடியார் அச் சிவனிறைவில் சமநிறைவாய் நிற்றலினால் எங்குந் தாமாகி நின்றார். அச் சிவன் அருளிச் செய்யும் அருளிப் பாட்டினை அவனருளால் கண்டிருந்தனர். இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக்காலமும் ஒருபுடையாகப் புலம்பு புணர்வு புரிவு என்னும் முந்நிலைகளாகவும் கூறுதல் பொருந்தும். அம்மூன்றன் இயல்புகளையும் நினைவுணர்விற் கண்டிருந்தனர். இருள் முனைப்பும் மருள்முனைப்பும் அறுதலாகிய இழவுவந்து அருள் முனைப்பால் தற்செயலறுதலாகிய சோம்பெய்தியிருப்பர். இருள் முனைப்பு - யான் என்னும் செருக்கு. மருள் முனைப்பு - எனதென்னும் செருக்கு. அருள் முனைப்பு - செருக்கறுதல். புலம்பு - கேவலம். புணர்வு - சகலம். புரிவு - சுத்தம்.

(அ. சி.) இழவு - ஒழிவு. சோம்பு - செயலற்றிருத்தல்.

(15)

172. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதுஞ் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடஞ்
சோம்பர்கண் டாரச் சுருதிக்கண் தூக்கமே.2

(ப. இ.) தற்செயலற்றுச் சிவச் செயலாக இருப்பவர் சோம்பர் எனப்படுவர். அத்தகையார் தங்கியிருப்பது இயற்கை உண்மைத் தூவெளியாகிய சிவவெளியில். அவர் பேரின்பம் நுகர்ந்து கிடப்பதும் அச் சிவ வெளியிலேயேயாம். அவர் உணர்வு மறைக்கும் எட்டாத முடிவிடமாகிய சிவவெளியில் திருவடியுணர்வோடு ஒன்றி உழந்துணரும். அவர்கள் மறையாகிய சுருதிக்கண் நினைவறுதலையே கண்டனர். உழந்துணர்தல் - அனுபவித்தல். இதன்கண் இருப்பது கிடப்பது. உணர்வது என்னும் சொற்கிடக்கை முறையான் முறையே அன்பு ஆற்றல் அறிவென்னும் உயிர்ப் பண்பு மூன்றும் சிவத்தின் பால் ஒருங்கு


1. ஏகமாய். சிவஞானபோதம், 11. 1 - 2.

" அரக்கொடு." 2. 1 - 3.

2. கண்கள். 8. திருப்படையாட்சி, 1.

" காணும். சிவஞானபோதம், 11.