1239
 

இணையினை எல்லாத் தேவரும் வல்லவாறு தொழுவர். அத்தகைய சிவபெருமானை உண்மைநிலையில் - உணர்வுநிலையில் அருளால் கண்டு தன்னைக் காணாக்கண், கண்ணாடியைக் காணுங்கால் தன்னை அகக் கண்ணாடியினகத்துக் காணுமாறு போன்று காணப்பெற்றிலேனே என அல்லும் பகலும் ஒல்லும் வாயெல்லாம் ஓவாதரற்றினன். அதனைக் கண்ட பிறர் அடியேனைப் பித்தனென்று முடிவுசெய்து படியின்மிசைத் தூற்றுகின்றனர். கண் தன்னைக் காணுமாற்றைப் பின்வருமாறு நினைவு கூர்க:

"கண்ணா டியைக்காணும் கண்ணே தனைக்காணும்
பெண்ணார்தாள் காணவுயிர் பேசுங்கால்-கண்ணாடி
உள்தோன்றும் பல்பொருளும் ஓர்வாம் திருவடியின்
உள்தோன்றும் பல்லுயிரும் ஓர்.

(அ. சி.) முகிழ் - உள்ளத்தில் இருக்கின்ற.

(3)

2943. புகுந்துநின் றானெங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றானெங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் 1றேனே.

(ப. இ.) திருவருள் நினைவால் பொருவரும் பெண்ணொரு கூறனாம் பண்ணமர் புண்ணியன் அடியேன் நெஞ்சகத்துப் புகுந்து நின்றனன். அவனே அறவாழி அந்தணன். அடியேங்களுக்குச் செவ்வி வருவித்துத் திருவடியுணர்வினைப் போதிக்கும் முற்றுணர்வினனும் அவனே. அத்தகைய போதறிவாளன் என்னுள்ளம் புகுந்துநின்றனன். மெய்யடியார்கள்தம் திருவுள்ளத்தை 'நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பித்து'ப் புகுந்து நின்றவனும் அவனே. அத்தகைய பெரும்பொருட்கிளவியானை அவன் என்னகம் புகுந்தமையால் போற்றுகின்றேன். இது, பாடப் பயிற்றியான் பண்பதனைப் பாடலொக்கும், கூடச்செய் தான்தாள் கூறல், என்பதனையொக்கும்.

(அ. சி.) போதறிவாளன் - எல்லாம் அறிபவன்.

(4)

2944. பூதக்கண் ணாடியிற் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படும்
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியிற் கேட்டுநின் 2றேனன்றே.

(ப. இ.) பூதக் கண்ணாடி யென்பது முகத்துக் காணும் கட்பொறியாகும். அக்கண்ணுக்குப் புலனாம் வண்ணம் அமைந்த நிலைமையன்


1. துஞ்சும். அப்பர், 5. 93 - 8.

" செங்க. " " 95 - 11.

" கீதராய்க். " 5. 33 - 7.

" கீதத்தை. சம்பந்தர், 2. 43 - 5.

2. பூம்படி. அப்பர், 4. 103 - 3.