1120
 

(ப. இ.) தமிழகத்தின் தென்பால் எல்லை கன்னியாகுமரியாகும். (வடபால் எல்லை பொன்மலை.) இது நன்னெறி நான்மையின் நற்பகுப்பாம். இதனகத்துச் சிறப்பாக ஓதப்பெறும் தீர்த்தங்கள் ஒன்பது. அவை முறையே 'காவிரி, யமுனை, கங்கை, சரசுவதி, பொற்றாமரை, புட்கரணி, கோதாவரி, குமரி, தாமிரபரணி' என்பன. ஏழு மலைகளும் ஓதப்படுகின்றன. அவை முறையே கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி என்பனவாகும். இவற்றிற்கிடையே மாதவம் செய் தென்திசைக்கண் செம்பொருளைத் தம் பொருளாகக் கொண்டு திகழும் செந்தமிழ் மொழிப்பால் நெறி நூலாகிய வேதமும், துறை நூலாகிய ஆகமமும் தொன்மைக்காலத்தே தோன்றின வென்க. அவற்றால் நன்னெறிப்படரும் தூயோர் கொலை புலை நீத்த தமிழ் நெறி நின்று நனி நாகரிகராயினர். ஒரு முழுமுதலாம் சிவபெருமானை வழுவின்றித் தொழும் தமிழ்த்துறை நின்று விழுமியராயினர். அம் முறையான் ஒழுகலாற்றில் தலைதடுமாற்றமில்லாத தென்திசைத் தமிழகம் என்றும் பொன்றா இயற்கை உண்மைத் தூய்மையேயாகும். யாறுகள் திருத்தொண்டர் புராணத்து வைப்புமுறைப்படி வருவனவற்றை வரும் வெண்பாவால் உணர்க.

"காவிரியே பெண்ணையம ராவதி பொன்முகலி-
மேவு பொருநை மிளிர்வையை - தாவில்கம்பை
கொள்ளிடம்பா லிக்கெடிலம் கூறுமண்ணி முத்தாறு
வெள்ளாறு கங்கைநிவா மேவு."

(அ. சி.) ஈறான கன்னி - தமிழ்நாட்டுக்குத் தெற்கு எல்லையாக விளங்கும் கன்னி ஆறு. கன்னி நதியும் - குமரி நதியும்; (2000 வருடங்கள் முன்னரே ஒளிநாடு - பெருவளநாடு - குமரி நாட்டோடு கடல்கொண்டு அழிந்தது.) ஒன்பது தீர்த்தங்களும் ஏழு வெற்புக்களும் தென்னாட்டுக்குள் இருப்பன. இம் மந்திரத்தால் முதல்முதல் வேத ஆகமங்களும் தென்னாட்டில்தான் பிறந்தன என்பது தெளிவாகின்றது.

(7)

2710. நாதத் தினிலாடி நாற்பதத் தேயாடி
வேதத்தி லாடித் தழலந்த 1மீதாடி
போதத்தி லாடிப் புவன முழுதாடுந்
தீதற்ற தேவாதி தேவர் பிரானன்றே.

(ப. இ.) இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்கிய இயற்கை உண்மை அறிவு இன்பப் பெருமான் தேவாதி தேவர் பிரானாவன். அவன், திருவருளால் நாதத்தினில் ஆடியருளுகின்றனன். சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நாற்பாதத்தினும் ஆடியருளுகின்றனன். நெறிநூலாகிய தமிழ்வேதத்தின்கண் ஆடியருளுகின்றனன். சிவ வேள்வித் தழலுச்சியிலும் ஆடியருளுகின்றனன். சிவஞான போதம் நல்கும் துறைநூலாகிய தமிழாகமத்தின்கண்ணும் ஆடியருளுகின்றனன். இம் முறையான் இரு நூற்றிருபத்து நான்கு புவன முழுவதும் ஆடியருளுகின்றனன். அவன் விழுமிய முழுமுதற் சிவபெருமானாவன்.


1. அஞ்செழுத்தா. சிவஞானபோதம், 9. 3 - 1.

" பூமென். அப்பர், 5. 18 - 8.

" சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 1 - 2.