763
 

காலைக் கடற்செவ்வான் காட்டும் சிவமுருகன்
வேலைமுக்கூ றாம்பகல் மேவுமால்-மாலைச்செவ்வான்
வைகுசிவன் மேகம் வளர்சடைமேற் றிங்கள்தோய்
மைமுகில்நீ ராவிகங்கை மற்று.

(அ. சி.) பகலவன் - அண்டச் சூரியன். மாலவன் - அரி. இகல் அற - பேதம் இன்றி. பகலவன் - சிவசூரியன்.

(2)

1940. ஆதித்தன் அன்பினோ டாயிர நாமமுஞ்
சோதியி னுள்ளே சுடரொளி யாய்நிற்கும்
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.

(ப. இ.) ஆதித்தனாகிய சிவஞாயிற்றினைச் சோதியாகிய உலக ஞாயிறு ஆயிரந் திருப்பெயர்களை வாயாரப் புகன்று வழிபட அஞ்ஞாயிற்றினுள் அளவில் சுடரொளியாய் அவன் விளங்குவன். அச் சிவன் திருப்பெயரை மறையவராயினும் வானவாரயினும் காதலால் ஓதுவராயின் சிவனருள் அன்பு செழித்துப் பழுக்கின்றவாறாகும். சிவன் திருப்பெயர் 'நமசிவய' என்ப.

(அ. சி.) ஆதித்தன் - சிவசூரியன். சோதி - அண்டச் சூரியன். ஆதியில்-சிவபிரானிடத்தில்.

(3)

1941. தானே யுலகுக்குத் தத்துவ னாய்நிற்குந்
தானே யுலகுக்குத் தையலு மாய்நிற்குந்
தானே யுலகுக்குச் சம்புவு மாய்நிற்குந்
தானே யுலகுக்குத் தண்சுட ராகுமே.1

(ப. இ.) மேலோதிய சிவபெருமானே உலகினுக்கு என்றும் ஒருபடித்தாய் நிற்கும் மெய்ப்பொருளாவன். அவனே உலகியல் நடத்தற் பொருட்டுத் தையலாகிய திருவருளாயும் நிற்பன். அவனே ஆருயிர்கட்கு இடையறா இன்பருளிச் சம்புவமாய் நிற்பன். அவனே தண்சுடராகிய திருவருட் பேரொளியாய் நிற்பன்.

(அ. சி.) தத்துவமாய் - மெய்ப்பொருளாய். தையல், சம்பு - சத்தி, சிவம் (Positive and Negative Energy). தண்சுடர் - அருள் ஒளி.

(4)

1942. வலையமுக் கோணம்2 வட்டம் அறுகோணந்
துலையிரு வட்டந் துய்ய விதமெட்டில்
அலையுற்ற வட்டத்தில் ஈரெட் டிதழாம்
அலைவற் றுதித்தனன் ஆதித்த னாமே.

(ப. இ.) வளையம், முக்கோணம், வட்டம், அறுகோணம், துலை, இருவட்டம் ஆகிய அறுவகை அடையாளங்களால் மூலமுதல் ஆறிடங்


1. தானலா. அப்பர், 4040 - 1.

" தையலோர். 8. அன்னைப்பத்து, 4.

(பாடம்) 2. விட்டம்.