1117
 

"குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு."

(544)

என்னும் செந்தமிழ்ப் பொதுமறையான் நன்குணரலாம். அம் முறை போன்று சிவபெருமான் பிறைக்கு இருப்பிடமாகின்றான். ஆனேற்றை ஊர்பவனாகின்றான். இதனால் யாண்டும் சிவபெருமான் சார்பாகவே ஆருயிர்கள் வாழும். இவ் வுண்மை விளக்கும் குறிப்பு வருமாறு:

'எம்மான் இருப்பும் இருப்பதுவு மாயிருப்பன்
செம்மான் பிறைஏறு சேர்ந்துதமிழ் - அம்மான்பால்
பேணுபிறை ஆருயிராம் பெம்மான் தலையிடத்தாம்
பேணுநிறை முற்றடிக்கீழ்ப் பேசு.'

(அ. சி.) பூமி நடுரேகை (Equator) அயனரேகைகள் (Tropic of cancer and tropic of capricorn), இவைகளுக்கு இடைநிலையே மூன்றாம் பிறையை அணிந்த சிவபெருமான் ஆடும் எல்லைகளாகும் என்று இம் மந்திரம் குறிக்கின்றது. ஐந்து அம்பலங்களும் இவ் வெல்லையிலேயே இருப்பதை நாம் காண்கின்றோம்.

(10)

பொற்றில்லைக் கூத்து

2703. அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டையா காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருஅம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானன்றே.

(ப. இ.) ஏழுவகை அண்டங்களும் விழுமிய முழுமுதற் சிவபெருமானார் தழுவும் அழகிய பொன்போலும் ஊராகவும், அவற்றின் உறுப்பாகக் காணப்படும் ஐம்பெரும் பூதங்களிலும் விரவி நிற்கும் பானங்கள் ஐந்தும் பதியாகவும் கொண்டு அவன் புறத்துத் திருக்கூத்தியற்றுகின்றனன். அதுபோல் அவன் ஆருயிரின் அகத்து நடுநாடிக்கண் திருவருளாற்றலை அம்பலமாகக் கொண்டு திருக்கூத்தியற்றுகின்றனன். அவனே அறிவுப் பேரொளியாம் பரஞ்சோதியாவன். ஆகாசங்கள் ஐந்தனையும் முறையே குணங்கடந்த வெளி, குணவெளி, பெருவெளி, மெய் (தத்துவம்) வெளி, ஞாயிற்று வெளி எனக் கூறலுமொன்று. பதி: தலைநகர்.

(அ. சி.) ஆகாசங்கள் ஐந்து - மண்ணில் ஆகாயம், நீரில் ஆகாயம், தீயில் ஆகாயம், வாயுவில் ஆகாயம், ஆகாயத்தில் ஆகாயம் ஆக ஐந்து.

(1)

2704. குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாஞ்
சிரானந்தம் பூரித்துத் தென்திசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையுந் தானும்
நிரானந்த மாகி நிருத்தஞ்செய் தானே.

(ப. இ.) சிவகுருவால் அருளப்பட்ட இன்ப நெறியாய், அந் நெறி யொழுக்கால் மேம்பட்ட சிவபெருமானின் எட்டுவான் குணத்தின்பம்