(அ. சி.) தான் - உடம்பு. தனம் - பொருள். ஊன் - மாமிசம். வான் - ஆகாயம். மனம் - நினைப்பு, மறப்பு. நான் - சீவபோதம். (16) 2912. இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப் பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே உருளாத கன்மன முற்றுநின் றேனே. (ப. இ.) இருளாகிய மறப்பும், வெளியாகிய நினைப்பும் என்னும் இரண்டினையும் திருவருள் நினைவால் மாற்றுதல்வேண்டும். மாற்றவே பொருள்கள் அனைத்தினும் சிறந்து செம்பொருளாய்த்திகமும் சிவத்துடன் பொருந்துதல் வாய்க்கும். வாய்க்கவே அச் சிவன் நாட்டத்தினுள்ளே எழுந்தருளி ஆட்கொண்டருள்வன். ஆட்கொள்ளவே காமம் வெகுளி மயக்கம் கையகன்றழியும். அழியவே அத்தனாகிய சிவபெருமான் திருவடிக்கண் முன் உருகாத மனம் உருகி நன்மனம் பொருந்தித் திருந்தநின்றேன். அதுவே அந்தமில் இன்பத்து அழிவில் வீடாகும். நாட்டம் - சித்தம். (அ. சி.) இருளும் வெளியும் - நினைப்பும் மறப்பும். பொரு . . . . . . பொருந்த பொருள்களுள் சத்துப்பொருளாய் அமைய. உள்ளாகி - உள்ளத்தில் எழுந்தருளி. அழித்திடும் - மோகத்தைக் கெடுத்த உருளாத - சென்று உருகாத. (17) 2913. ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் பரபாரம் ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் சிவகதி1 ஒன்றிநின் றுள்ளே யுணர்ந்தேன் உணர்வினை ஒன்றிநின் றேபல வூழிகண் டேனன்றே. (ப. இ.) திருவருள் நினைவால் உள்ளம் ஒருங்கி உன்னினேன். உன்னலும், பராபரமாகிய பெரும்பொருளை யுணர்ந்தேன். அதுபோன்று சிவகதியினையும் உணர்ந்தேன். அதுபோன்று திருவடியுணர்வினையு முணர்ந்தேன். அதுபோன்று பலவூழிகளையும் கண்டுணர்ந்தேன். ஊழி - யுகமுடிவு. சிவகதி நிலையினை அப்பர் பெருமான் ஓதியருளும் வரும் அருமறையானும் உணர்க: "கேடு மூடிக் கிடந்துண்ணு நாடது தேடி நீர்திரி யாதே சிவகதி கூட லாந்திருக் கோளிலி யீசனைப் பாடு மின்இர வோடு பகலுமே." (5. 56 - 9.) (அ. சி.) ஒன்றிநின்று - ஒருமுகப்பட்டு. உணர்வினை - தத்துவ அறிவை. பல ஊழி - பல யுகங்கள். (18)
1. வெம்மை. அப்பர், 5. 43 - 8.
|