1108
 

யற்றும். சிவபெருமான் செய்யும் செயல் அனைத்தும் சிவசத்தியின் செயலே. அதனால் திருவருள் கூத்தியற்றும் என ஓதினர்.

(அ. சி.) சதாசிவத்துக்கு - சதாசிவ தத்துவம் அல்லது சாதாக்கிய தத்துவத்தின் தலையில்.

(1)

2687. கொடுகொட்டி பாண்டரங் கோடுசங் கார
நடமெட்டோ டைந்தாறு நாடியுள் நாடுந்
திடமுற் றெழுந்தேவ தாருவாந் தில்லை
வடமுற்ற மாவன மன்னவன் 1தானே.

(ப. இ.) சிவபெருமான் செய்தருளும் திருக்கூத்தின் திருப்பெயர்கள் வருமாறு: கொடுகொட்டி, பாண்டரங்கம், கோடு, ஐவகைச் சங்காரத்துடன் காளிக்கூத்து முனிக்கூத்து இன்பக் கூத்துங் கூடிய எட்டு, ஐந்தொழிற்கூத்து, அறுசமயக்கூத்து என இருபத்திரண்டென்பன. இக்கூத்துக்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் நிகழ்த்தியருளப் பெற்றனவாகும். அவற்றுள்ளும் சிறந்தன இரண்டென்ப. அவை முறையே உறுதியின் விழைவு பொருந்த எழுந்த தெய்வத் தன்மை வாய்ந்த தில்லைவனக்காட்டிலும், அதுபோன்று சிறந்த ஆலவனக் காட்டிலும் நிகழ்த்தியன என்ப. தில்லைவனம் உலக நிகழ்வாம் அன்பியற் கூத்தாகும். ஆலவனம் திருவடி நிகழ்வாம். அருளியற் கூத்தாகும். இவற்றால் நிகழ்வன இன்பியல் வாழ்வாகும். ஐவகைச் சங்காரம்: நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் முதலிய கலைப் பகுதிகள் ஒடுங்கும் ஒடுக்கமாகும். கலை: நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை என ஐவகைப்படும். இவற்றை முறையே நீக்கல் முதலாகக் குறிக்கப் பெற்றுள்ளன. பாண்டரங்கம் என்பது 'பாண்டரங்' எனநின்றது செய்யுளின் திரிபு.

ஆடலினை அல்லிய முதல் கொடுகொட்டியீறாகப் பதினொன்றென்ப. அவற்றை வரும் சிலப்பதிகார அரங்கேற்றுகாதையின் மேற்கோள் செய்யுளான் உணர்க:

"கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைதுடிமா லல்லியமல் கும்பம் - சுடர்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதினோர் கூத்து."

"பாண்டரங்கம் முக்கண்ணா னாடிற் றதற்குறுப்,
பாய்ந்தன வாறா மெனல்."

"கொட்டி கொடுவிடை யோனாடிற் றதற்குறுப்,
பொட்டிய நான்கா மெனல்."


1. ஆறறி. கலித்தொகை. கடவுள் வாழ்த்து, 1.

" கொள்ளைக். அப்பர், 6. 35 - 5.

" பற்றார் " 37 - 6.

" தொண்டு. 5. 30 - 6.