233
 

நம் மங்கையர்க்கரசியார் தம்கணவராகிய நின்றசீர் நெடுமாறனாரை ஆளுடையபிள்ளையாரைக் கொண்டு ஈண்டு மீண்டும் சிவனெறிக்குஆக்குவித்தது போன்று ஆண்டுச் சிவனார் திருவடிக்கண்ணும் அவரோடுங் கூட அமர்ந்திருக்க அருள் பெற்றுஅவரைத் திருவடிக் கண் ஆக்கிவித்தார். அவ்வுண்மைசேக்கிழாரடிகள் அருண்மொழியான் உணரலாம்.

அது வருமாறு :

"பூசுரர்சூ ளாமணியாம் புகலி வேந்தர்
    போனகஞா னம்பொழிந்த புனிதவாக்கால்
தேசுடைய பாடல்பெறுந் தவத்தி னாரைச்
    செப்புவதியா மென்னறிந்து தென்னர்கோமான்
மாசில்புகழ் நெடுமாறன் தனக்குச் சைவ
    வழித்துணையாய் நெடுங்காலம் மன்னிப்பின்னை
ஆசில்நெறி அவரோடுங் கூட ஈசர்
    அடிநிழற்கீழ் அமர்ந்திருக்க அருளும் பெற்றார்."

- 12. மங்கையர்க்கரசியார், 2.

இத்தகைய பத்தினிப் பெண்களையும், (திருவடி ஞானத்தின்மேல்விளையும் அன்பு பத்தியெனப்படும்; அத்தகைய) பத்திசேர்பத்தர்களையும், மெய்யுணர்வு கைவரப் பெற்றாரையும்சித்தங் கலங்கத் தீமைகள் செய்த கொடியோர்பொருளும் உயிரும் ஓராண்டினுக்குள் நீங்க நரகத்தின்கண்ணே ஆழ்வர். இஃதுண்மை. நந்தியின் ஆணை. ஆளுடையபிள்ளையாரின் திருவுள்ளம் கலங்கச் செய்தஅமணரும் வரும்வழி தடுத்த புத்தரும் அப்பொழுதேவாழ்விழந்தமை இதற்கொப்பாகும். பத்தினிப் பெண்களின்சிறப்பு, கண்ணகி வரலாற்றாலும் காணலாம்.

அது,

"கோவல னாவிற் கூறிய மந்திரம்
பாய்கலைப் பாவை மந்திர மாதலின்
வனசா ரிணியான் மயக்கம் செய்தேன்
புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும்
200. என்திறம் உரையா தேகென் றேகத்."

- சிலம்பு 11. காடுகாண் காதை.

(தவத்தினும் கற்புச் சிறந்ததாகலின்,முற்கூறினார். இவர் சாயலும் அறனும் உடையரேனும்தவறுகண்டுழிக் கணத்தின் வெகுண்டு சவிப்ப ரென்றஞ்சிஅவர்க்கு உரையாதொழியென்றிரந்தா ளென்க. - அடியார்க்குநல்லார்.) தத்துவ ஞானிகள் - சித்தாந்த மெய்யுணர்வுகைவந்த நாயன்மார். அத்தமும் - பொன்னும்பொருளும். (3)

516. மந்திரம் ஓரெழுத்துரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.