கிளக்கும் காலை என்பெயர், பேதைச் சோழன் என்னும் சிறந்த, காதற் கிழமையும் உடையன்' என்பதும் இந்நிலையினை உணர்த்தும். மேலும் பின்னல், புணர்ப்பு, கலப்பு என மன்னும் பெயர்களும் அவ்வாறேயாம். (10) 2906. கண்டார்க் கழகிதாங் காஞ்சிரத் தின்பழந் தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை பெண்டா னிரம்பி மடவிய ளானாற் கொண்டான் அறிவன் குணம்பல தானே.1 (ப. இ.) எட்டிப்பழம் தின்பாரைக் கொல்லும் தன்மைத்து. ஆனால் பார்ப்பாரைத் தன் வனப்பினால் ஈர்க்கும் தன்மைத்து. அதுபோல் மாயாகாரியமாகிய வுலகமும் தன்பாற் பற்றுக்கொண்டாரை மருட்டிப் பிறப்பில் புகுவிக்கும் தன்மைத்து. ஆனால் அது காண்பார்க்குக் கடல், மலை, கான்யாறு, நானிலப்பகுப்பு, நல்லுயிர் வாழ்க்கை முதலாக வுள்ளனவற்றால் மிக்கவனப்பினைக் காட்டி ஈர்க்கும் தன்மைத்தாக இருக்கிறது. எட்டிப்பழத்தை அறிவால் மருண்டு தின்றவர் உண்மை யறியுமாறுபோன்று உலகிடைச் சிக்குண்டவர் தாமே உண்மையறிவர். உருவும் திருவும் பருவமும் எய்திய ஒரு பெண்ணை அவை முற்றவும் உடையனாய் மணந்தவன் மட்டுமே அப் பெண்ணின் இன்பினை நுகர்ந்துணைர்ந்து எழிலுறுவன். அதுபோல் ஆருயிர்கள் சிவத்தைப் பேணிப் பேரின்பம் பெறுதல் வேண்டும். அம்முறையால் அவைகள் பெண்ணெனப்படும். பெண் நிலையில் ஆருயிர்கள் ஆண்டான் திருவடியின்கண் வேறறக் கூடும். அப்பொழுது திருவடியின்பத்தினை எய்தும் இவ்வுண்மை வரும் திருச்சிற்றம்பலக் கோவையாரின் திருப்பாட்டானும் உணர்க: "சங்கந் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்க மலிதலை யேந்தலின் ஏந்திழை தொல்லைப்பன்மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே." (85) (அ. சி.) காஞ்சிரம் - எட்டி. மடவியள் - மடந்தைப் பருவத்தினள். கொண்டான் - கணவன். (11) 2907. நந்தி யிருந்தான் நடுவுள் தெருவிலே சந்தி சமாதிகள் தாமே யொழிந்தன உந்தியி னுள்ளே யுதித்தெழுஞ் சோதியைப் புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனன்றே. (ப. இ.) திருவருள் நினைவால், சிவகுருவருளால் அகத்தவப் பயிற்சியால் உள்ளத்தின் நடுவில் நந்தி எழுந்தருளியிருந்தனன். தாலி (2868) கட்டி முடிந்தபின் மணச் சடங்குப் பொருள்கள் தாமே கழிவன போன்று நந்தி எழுந்தருளினமையால் சந்தி சமாதிகள் தாமே அகன்றன. உள்ளத்தின்நடு - சித்தத்தின் மத்தி. மேல் வயிறாகிய மணி பூரகத்தினிடத்துத் தோன்றி மிக்கு எழும் திருவருள் பேரொளிப்பிழம்பாகிய சிவபெருமானை 'உயிராவணமிருந்து உற்றுநோக்' குதலாகிய
1. வருமிவ. 12. காரைக்காலம்மையார் , 58. 2. ஆனந்த. 8. திருக்கோவையார், 307.
|