1194
 

(அ. சி.) கொட்டனம் செய்து குளிக்கின்ற கூவல் - சீவபோதத்தை அடக்கிச் சிவபோதத்தில் திளைக்கில். வட்டனப்பூமி - சுகநிலை. கட்டனம் செய்து கயிற்றாற் றொழுமி - அந் நிலையைக் கட்டுப்படுத்தி நிலைக்கச் செய்து. உள் ஒட்டனம் செய்து - உள்ளத்துள்ளே ஓங்கவைத்தால். ஒளி - சிவத்தின் ஒளி.

(40)

2866. ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
ஆழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில தாலய மாகுமே.

(ப. இ.) உலகங்கள் ஏழையும் தனித்தனி எழுந்து வளைவாகச் சூழ்ந்திருக்கும் கடல்கள் ஏழு. நிலத்தினை அழுத்திக்கொண்டிருக்கும் ஓங்கி உயர்ந்த சிறந்த மலைகள் எட்டு. இவை ஆழ்ந்திருக்கும். விசும்பாகிய வானமும், வளியாகிய காற்றும், அங்கியாகிய தீயும் மழையாகிய நீரும், இவற்றைத் தாங்கித் தாழ்ந்திருக்கம் நிலமும் என்னும் ஐம்பூதச் சேர்க்கையாலாகிய இவ் வுலகமும் இவ் வுடலும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கோவில்களாகும் (1792). இவ் வுண்மையினை அருளால் பொருளாய்வின்வழிக் காணுதல் வேண்டும். உலகைச்

"சுவை யொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகை தெரிவான் கட்டே யுலகு."

(27)

என்னும் தமிழ்மறையின்படி ஆய்தல் வேண்டும். இத்திருப்பாட்டினிற்கு எல்லாரும் நிலையாமை யொன்றே குறிக்கோளாகக் கொண்டனர். இந்நிலையாமை புற ஆய்வாகும். அக ஆய்வாகக் கொள்ளுங்கால் 'இருதிறன் அல்லதாய் சிவசத்தாய்'க் காணப்படும் மெய்ப்பொருட்டெளிவு தோன்றும் தோன்றவே அம் மெய்ப்பொருட்சிவத்தை அடைதற்கு இவ்வுடலும் உலகமும் துணைக் கருவிகளென்னும் துணிவு தோன்றும். தோன்றவே, இவற்றைத் திருக்கோவிலெனக் கொண்டு 'உடல்பினை நானிருந் தோம்புகின்றேனே' (705) என்னும் முறைமைப்படி ஒம்பப்படும். அதுவே வாழ நினைக்கின்றதாகும். இதுவே 'அற்குப ஆங்கே செயல்' என்னும் செந்தமிழ்ப் பொதுமறையின் செம்பொருளாகும்.

(அ. சி.) ஏழு வளைகடல் - அக்காலத்துக் குறிப்பிட்ட பூமி அண்டத்து ஏழு கடல். எட்டுக் குலவரை - சிறந்த எட்டு மலை. ஆழும் - இருக்கும். விசும்....இருநிலம் - நிலம், நீர், தீ, வளி, வெளி. அது ஆலயமாமே - அந் நிலம் ஆலயம் போன்றது. ஆ + லயம் - ஆன்மா சிவத்தோடு இலயிக்கும் இடம்.

(41)

2867. ஆலிங் கனஞ்செய் தகஞ்சுடக் சூலத்துச்
சாலிங் கமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோலிங் கமைத்தபின் கூபப் பறவைகண்
மாலிங்கன் வைத்தது முன்பின் வழியன்றே.

(ப. இ.) பெருங்காதலுடன் கவவுக்கை நெகிழாமல் காற்றூடறுக்காமல் கட்டித்தழுவி அகம்சூடுண்டாக இருவரும் மருவினர். அதனால் அருஞ்சூல் உண்டாயிற்று. 'அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம்