20
 

(ப. இ.) படைத்தற்பொருட்டு அந்திவண்ணனாய்ப் பொன்நிறங் கொண்டருள்பவனே, துடைத்தற்பொருட்டு அரனாய் நீலநிறங் கொண்டருள்பவனே, அருளுதற் பொருட்டுச் சிவனாய் வெண்ணிறங் கொண்டருள்பவனே என்று திருந்திய மெய்யடியார்கள் தொழுவர். உலகந்தோன்ற வேண்டும் எனச் சிவன் திருவுள்ளங் கொண்டதும் அதன் பொருட்டுத் திருவருளின்கண் முதற்கண் தோன்றிய நிறம் ஐந்து. இவ்வைந்தும் ஒருங்கு கூடியவனே முந்திவண்ணன். அவனே முழுமுதல்வன். இங்ஙனம் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி அடியேனும் வாழ்த்த, அந்திவண்ணனும் அருளால் வந்து அடியேன் அகம் புகுந்தருளினன்.

முதல்வன்- வினைமுதற் காரணன். பரன் - யாவர்க்கும் மேலானோன்.

(அ. சி.) முந்திவண்ணா - படைப்புக்கு இச்சை கொண்ட காலத்தில் முதல் முதல் வெளிப்பட்ட ஐந்நிறக் கதிர்களை உடையவனே.

(46)

47. மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்
நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்
பனையுள் இருந்த பருந்தது1 போல
நினையா தவர்க்கில்லை நின்இன்பந் தானே.

(ப. இ.) சிவபெருமான் உயிர்க்குயிராய் உடம்பகத்துத் திருக்கோயில் கொண்டருளியிருக்கும் உண்மையுணர்ந்து, அதற்கேற்றவாறு செந்நெறியில் ஒழுகி உடலோம்புவார் பெருந்தவத்தராவர். அச் சிவன் நினைவுக் கருவியாகிய நெஞ்சத் தாமரையின்கண் எழுந்தருளியிருக்கும் விழுமிய தன்மையை அறிந்தவர், அவன் திருவடிக்குப் பேரன்பு பூண்டு ஒழுகும் நேயத்தராவர். அச் சிவபெருமானின் திருவடிப் பேரின்பம் திருவருள் துணையால் நினையாதவர்க்கு எஞ்ஞான்றும் எய்துதல் இல்லை. அதற்கு ஒப்பு பனைமரத்தின் மேலிருக்கும் பருந்து அப் பனம்பழத்தின் இயல்பினை அறியாமையால் அதனை யுண்ண நினையாது, இழிந்த பொருளை உண்ண நினைத்துப் பழியுடன் இருப்பதாகும்.

(அ. சி.) பனையுளிருந்த பருந்ததுபோல - பழத்தையுடைய பனை மரத்தின் மேல் பருந்து இருந்தாலும் பழத்தை நினைப்பதில்லை அது போல.

(47)

48. அடியார் பரவும் அமரர் பிரானை
முடியால் வணங்கி முதல்வனை முன்னிப்
படியார் அருளும் பரம்பரன் எந்தை
விடியா விளக்கென்று மேவிநின் றேனே.

(ப. இ.) திருவடி யுணர்வு கைவந்த பொய்யடிமையில்லாத புலவராம் மெய்யடியார் பாடிப் பரவிப் பணிந்து அமரர்பிரானாகிய சிவபெருமானைத் தொழுவர். இவ்வுண்மை 'பாடிப் பரவிப் பணிதல் ஒருமூன்றும், ஈடிலுரை உள்ளமுடல் எண்' என்பதனான் உணரலாம். முத்தேவர் முதலிய ஆட்சியினர் முடியார் எனப்படுவர். அவர்களாலும் வணங்கப்படும் முழுமுதல்வன் சிவன். அவன் தன் மெய்யடியார்களைத் திருவுளங் கொண்டு சிறந்தபடியாகிய


1. பரப்பமைந்து. திருவருட்பயன், 36.