153
 

5. "செறிகழல் வேந்தன் தென்றமி ழாற்றல்
அறியாது மலைந்த ஆரிய மன்னரைச்
செயிர்த்தொழில் முதியோன் செய்தொழில் பெருக
உயிர்த்தொகையுண்ட வொன்பதிற் றிரட்டியென்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும்

10. "ஈண்டுநீர் ஞாலங் கூட்டி யெண்கொள."

(8)


3. இலிங்கபுராணம்

333. அடிசேர்வன் என்னஎம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்திசெய் தாளே.1

(ப. இ.) நிலவுலகமே சிவனார் திருவழிபாட்டுக்குச் சிறந்த இடமாகும். ஒரு செய்கையால் உலகுக்குப் பயன் ஏற்படுமானால் அது சிறந்த செய்கையாகும். நிலத்தே திருக்கோவிலில் சிவபூசை செய்தால் செய்வார்க்கும் அப் பூசையினைக் கண்டு வழிபட்டு உய்வார்க்கும் பயன் உண்டாகும். வானுலகத்தும் அவரவர் மனையகத்தும் பூசை செய்தால் பிறர்க்குப் பயன்படுவதில்லை. அதனாலேயே சிவபெருமான் பயனருளும் இடமாக நிலவுலகத்துத் திருக்கோவில்களைக் கொண்டருள்கின்றனன். இதனை 'வானிடத்தவரும் வந்து மண்மேல் அரன்றனை அருச்சிப்பர்' என்று தமிழாகமம் சாற்றுவதாயிற்று. தமிழாகமம் சிவஞான சித்தியார். அம் முறையில் திருவருளம்மை சிவபெருமான் திருவடியைச் செந்தமிழ்த் திருமுறையால் திருவைந்தெழுத்தால் அவன் அருவுருவத் திருமேனியில் வைத்து வழிபட்டுச் சார்வேன் என்று உன்னினள். உன்னி உலகத்திலேயே உயர்ந்த உச்சியினையுடைய வட எல்லையாகிய பனிமலையின் மகளாராய்த் தோன்றினர். தோன்றி அனைத்திற்கும் ஆதிகாரணமாக விருக்கும், எம் சிவனைநோக்கித் தவக்கோலம் பூண்டு மருதவளஞ்சேர் காஞ்சியை அடைந்து திருவுரு அமைத்து விண்ணவரும் மண்ணவரும் கண்டுய்ய நிரம்ப அருச்சித்து வழிபட்டுக் காதன் முதிர்ச்சியாகிய பத்தியினைச் செய்தனள் என்க.

(1)

334. திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே.2

(ப. இ.) உழன்று கொண்டு வரும் முப்புரங்களைச் செம்மை செய்யும் பொருட்டுச் சிரித்து எரித்தவன் சிவபெருமான். அவனை அணுகு


1. எள்கலின்றி. ஆரூரர், 7. 61 - 10.

" பூதியாகிய. 12. திருக்குறிப்பு, 66.

2. அருக்கன்நேர். சிவஞானபோதம், 11 . 2 - 1.