காலம் புழுவாய்ப் பிறந்து பழுதுற்றுத் துன்புறுவர்.ஓரெழுத்து - ஓர்ந்து உணரப்படும் ஐந்தெழுத்தாலாகியஆதி மந்திரம். ஒரு பொருள் - அம் மந்திரத்தால் பெறப்படும்ஒப்பில்லாத விழுமிய முழுமுதலாம் சிவபெருமான்.உணரக் கூறிய - அம் மறையினை உணரச் செவியறிவுறுத்த.சீரெழுத்தாளர் - மெய்யுணர்வளித்த ஆசான். சிதைய -சொல்லாலும் செயலாலும் கேட்டாரும் கண்டாரும் மனம்வருந்தும்படி செப்பினோர் - முறையின்றிப் பேசினோர்.சுணங்கன் - நாய். ஓருகம் - ஓரூழி. வார் - நீர்.கிருமி - புழு. செவியறிவுறூஉ - உபதேசம். (2) 515. பத்தினி பத்தர்கள்தத்துவ ஞானிகள் சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர் அத்தமும் ஆவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ் சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே. (ப. இ.) ஒழுக்கநெறி யிழுக்காக் கற்புடைப்பெண்டீராவார் நம் மங்கையர்க்கரசியார் போன்றுசிவனை மறவாச் சீரிய கற்பினராவர். ஈன்றுபுறந்தரும் தாயார் சான்றோனாக்குவர். ஏன்று கொண்டமனைவிமார் ஆன்ற தெய்வமாக்குவர். தெய்வமாக்குதல்சிவன் நினைவை உண்டாக்கிச் சிவனடியினைக் கணவன்சேர்ந்தின்புறத் துணைநிற்றல். இதுவே வாழ்க்கைத்துணைவியின்சிறந்த குறிக்கோள். தெய்வத்துக்குரிய எண்பேருருவங்களில்ஆருயிர் வடிவே சீருஞ்சிறப்பும் ஒருங்கமைந்தது.ஏனையவடிவங்கள் கடந்தேறும் வகுப்புமுறை போன்றன.பிற தெய்வம் தொழாளென்பது முன் பயிற்சியாகத் தொழுதுமேற்போந்தபின் மீண்டும் அப் பயிற்சியினை மேற்கொள்ளாளென்பாம். நாம் தெய்வ நினைவுடன் ஒரு பொருளை எவ்வாறுபார்க்கின்றோமோ அவ்வாறே அப்பொருள் அருளால்ஆகிவிடும். அவ்வுண்மை வரும் குமரகுருபர அடிகள் வாய்மொழியான் உணர்க: | "செய்தவ வேட மெய்யிற் றாங்கிக் கைதவ வொழுக்கமுள் வைத்துப் பொதிந்தும் வடதிசைக் குன்றம் வாய்பிளந் தன்ன கடவுள் மன்றிற் றிருநடங் கும்பிட்டு | 5. | உய்வது கிடைத்தனன் யானே யுய்தற் கொருபெருந் தவமும் உஞற்றிலன் உஞற்றாது எளிதினிற் பெற்ற தென்னெனக் கிளப்பின் கூடா வொழுக்கம் பூண்டும் வேடம் கொண்டதற் கேற்பநின் தொண்டரொடு பயிறலிற் | 10. | பூண்டவவ் வேடங் காண்டொறும் காண்டொறும் நின்னிலை என்னிடத் துன்னி யுன்னிப் பன்னாள் நோக்கின ராகலின் அன்னவர் பாவனை முற்றியப் பாவகப் பயனின்யான் மேவரப் பெற்றனன் போலு மாகலின் | 15. | எவ்விடத் தவருனை யெண்ணினர்நீயுமற் றவ்விடத் துளையெனற் கையம்வே றின்றே." |
- 7. சிதம்பர மும்மணிக்கோவை, 11.
|