882
 

மாணவர். கூட்டுவிப்போர் ஆசிரியர். எனவே செய்தார்செயல் வினைமுதலாகவும் செய்தார் பயனை ஏற்போராகவும், செயப்பட்டார் விளைநிலமாகவும்,1 சேர்ப்பார் கருவியாகவும் சேர்ப்பிப்பார் முழுமுதல்வராகவும் விளங்குவர். இது வரும் சேக்கிழாரடிகள் மொழியானுணர்க:

"செய்வினையும் செய்வானும் அதன்பயனும் சேர்ப்பானும்
மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி யல்லவற்றிற் கில்லையென
உய்வகையாற் பொருள்சிவனென் றருளாலே உணர்ந்தறிந்தார்."

(12. சாக்கியநாயனார், 5.)

'நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம்' என்னும் செந்தமிழ்ப் பொதுமறையின்படி நோக்கினால் தானே தனக்குப் பகைவனும் நண்பனும் ஆவன். அஃதாவது ஒருவன் முன்பு செய்த தீவினையால் துன்பப்படுகின்றான். ஆனால் அவன் தான் முன்பு செய்த தீவினைப்பயன் தனக்கு வந்ததென்று உணர்வதில்லை. அப் பயன் வருவதற்குக் கருவியாக இருந்தவர்களையே காரணர்களாகக்கொண்டு வருந்துகின்றான்; பகைக்கின்றான். உண்மையாக நோக்கினால் தானேதான் தனக்குப் பகை என்பது புலனாகாதிராது. இதுபோலவேதான் இன்பத்திலும் இவ்வுண்மை 'பெரியாரைப் பேணாதொழுகின் பெரியாரால் பேரா இடும்பை தரும்' (812) என்னும் செந்தமிழ்ப் பொதுமறையான் நன்குணரலாம். இதன்கண் பேணா ஒழுக்கம் வினைமுதலாகவும் பெரியார் கருவியாகவும் நிற்பது காண்க. செய்வினைக்கு ஏற்ப மறுமை உலகங்களில் இன்பத் துன்பங்களை எய்துதல் மறவாநினைவுடன் ஆதலின் அந் நினைவு தன் பொருட்டாகும். மீண்டும் பிறந்து ஈண்டு நுகர்தல் நுகர்வோர்க்கு நினைவின்றேனும் காண்போர்க்கு நினைவுறுத்தலின் அவர் கூறும் வாயிலாக நுகர்வோர்க்கும் உய்த்துணர்வு வருதலின் இருவர் பொருட்டுமாகும். அவர் கூறுவதாவது: முன்பு என்ன புண்ணியம் செய்தனனோ இன்புறுகின்றனன் எனவும், என்ன பாவம் செய்தனனோ துன்புறுகின்றனன் எனவும் உலகுணரக் கூறுவதாம். அதனால் தனக்கு மறுமையும் இம்மையும் தானே என ஓதினர். தான் செய்த வினைப்பயனைத் தன்னுடல் நுகராது2 தானே நுகர்தல் வேண்டும். பிறர்க்கும் போகாது. பிறவாற்றாலும் கழியாது. அதனால் துய்ப்பவனும் தானே எனப்பட்டது. அத் துய்ப்பினை அமைத்துக் கொண்டோனும் தானேயாதலால் தனக்குத் தலைவன் தானேஎன ஓதினர். தலைமை, வினைச்சிறப்பாலாம்.

(2)

2189. பாசம தாகும் பழமலம் பற்றற
நேசம தாய்நின்ற வாறாது நிங்கிடக்
காசமி லாத குணங்கே வலசுத்தம்
ஆசற நிற்ற லதுசுத்த சைவமே.

(ப. இ.) பண்டே புல்லிய பழமலம் பாசம் எனப்படும். அதன்கண்ணுள்ள பற்று நீங்குதற்பொருட்டு இடைசேர் மலமாகப் பொருந்திய மெய்கள் முப்பத்தாறு. இம் முப்பத்தாறு மெய்களிடத்தும் ஆருயிர்கள் அன்பு பூண்டு நின்றன. இம் முப்பத்தாறன் உண்மையினைத் திரு


1.வெல்வினை. சீவகன், முத்தி - 164.

2. மயக்கம. சிவஞானபோதம், 7. 3 - 2.