வேண்டும் என்னும் தம்பாலன்பாகிய செருக்கும் நீங்கா ஒருவர்க்கு ஆகா. அதனால் அவற்றை அறுங்கள். அறுத்தபின் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தினை எய்துதல் எளிது. அப் விடம் அன்பினால் தூய்மை எய்தி அருளினால் ஒளிரும் தம் உள்ளமேயாகும். அன்பு ஈண்டுப் பற்றின் மேற்று - பற்று : பத்து; பத்தி. (அ. சி.) வாசி - பிராணவாயு. ஊசி - சுழுமுனை. (1) 2569. மாடத்து ளானலன் மண்டபத் தானலன் கூடத்து ளானலன் கோயிலுள் ளானலன் வேடத்து ளானலன் வேட்கைவிட் டார்நெஞ்சில் மூடத்து ளேநின்று முத்திதந் 1தானன்றே. (ப. இ.) முழுமுதற் சிவபெருமான் எவ்வகை வேட்கையும் விட்டவர் எழின் னெஞ்சகத்து உயிர்க்குயிராய் உள் நின்று நீங்கா நிலைமையனாய்ப் பாங்காய் உறைந்து திருவடிப்பேறு அருள்கின்றனன். அங்ஙனம் அருளுவதற்கு வாயில்கள் சிவப் பொலிவுமிக்க மாடங்கள், மண்டபங்கள், கூடங்கள், கோவில்கள். வேடங்களாகும். இவை யயைதும் அவனை நினைவூட்டும் கருவிகளே. இவை மாடிக்குச் செல்லும் படி போன்றனவாகும். கற்பதற்குக் கருவியாம் நூல் போன்றனவுமாகும். அதனால் இவ் விடங்களினெல்லாம் நிலைத்து நிற்பானலன் என்னும் கருத்தால் மாடம் முதலியவற்றுள் உளானலன் என ஓதினர். (அ. சி.) மாடம் - சுவரில் உள்ள மாடத்தில். மூடம் - உள்ளம். (2) 2570. ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்பட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த 2மாகுமே. (ப. இ.) அடிமையாகிய ஆருயிர் 'வேண்டத்தக்க தறிவோய் நீ' என நினையாது தன்பால் முதன்மை ஏற்றி வீடும் வேண்டுதல் ஈடில் பெருங்குற்றமே யாம். இதனாலேயே ஆளுடைய அடிகளும் 'காயத்திடுவாய் உன்னுடைய கழற்கீழ் வைப்பாய், கண்ணுதலே என்னதோ இங்கதிகாரம்' என்று ஓதியருளினர். நோயாளி மருத்துவன்பால் ஆணையிடுவதும், கற்பார் கற்பிப்பார்பால் ஆணையிடுவதும் பிழை யாகுகுமன்றோ? அவையும் இதற்கு ஒப்பாகும். அதனால் ஆண்டவ னோடாயினும் ஆசையறுமின்கள்; ஆசையறுமின்கள். ஆசையுண்டாக உண்டாகப் பெருந்துன்பங்களாய் வந்து வருத்தும். அவ் வாசையினை விடவிட இன்பமே ஈடின்றிப் பெருகும். ஈசனோடாயினும் என்பது திருவடிப் பேற்றின் கண்ணும் என்பதாம். ஈசனோடாயினும்: உம்மை உயர்வு சிறப்பு. திருவடிப்பேறு காரியம்; திருவடியன்பு காரணம். கடமையையும்
1. வேண்டாமை. திருக்குறள், 363. 2. நாயிற். 8. குழைத்தபத்து, 8. " கேடும். 12. திருக்கூட்டச் சிறப்பு, 8. " இன்பம் விழையான், திருக்குறள், 615. " பிறந்தோ ...றருளி. மணிமேகலை, 2. ஊரல். 64 - 7.
|