1057
 

2581. ஆன்கன்று தேடி யழைக்கு மதுபோல்
நான்கன்றாய் நாடி யழைத்தேனென் நாதனன
வான்கன்றுக் கப்பாலாய் நின்ற மறைப்பொருள்
ஊன்கன்றா னாடிவந் துள்புகுந் 1தானன்றே.

(ப. இ. ஆன்கன்று தன் தாயை நாடி அம்மா (2407) என்று அழைப்பதுபோன்று அடியேனும் கன்றொத்துச் சார்பொருளாய் நாடிக் கனிந்தழைத்தேன். அங்னம் அழைத்தது யாரை எனின்? என்னைவிட்டு நீங்காது என்னுடன் மன்னி நிற்கும் பன்னரும் பண்பு சேர் என்னரும் நாதனை என்க. அவன் வான்கன்றாய் விளக்கும் மேனிலை யுலகத்து உயிர்களுக்கும் அப்பாற்பட்டவன். அத்தகைய மறைப் பொருளை ஊன் வாடியொழுகும் நிலையில் தவத்தின்கண் நான் புகாமல், தான் தனித்தருளும் நன்னெறி நான்மை நற்றவத்தில் அருளால் புகுந்துள்ளேன். அவனும் அந் நெறிமுறையான் என்னை நாடி வந்து அருள்புரிந்தருளினன்.

(அ. சி.) வான்கன்று - வானுலகில் உள்ள பசுக்கள் (ஆன்மாக்கள்).

(5)

2582. பெத்தத்துந் தன்பணி இல்லை பிறத்தலான்
முத்தத்துந் தன்பணி இல்லை முறைமையால்
அத்தற் கிரண்டும் அருளால் அளித்தலாற்
பத்திப்பட் டோர்க்குப் பணியொன்றும் 2இல்லையே.

(ப. இ.) ஆருயிர்கள் கட்டு நிலையில் இறவாத இன்ப அன்பினராய் அடிமை நினைவினராய் தம் முனைப்பற்று அருள்வழியொழுகி ஆர்வமொடு இறைபணி புரிகின்றன. அதனால் கட்டுற்ற காலத்தும் அவ் வுயிர் புரிவது எதுவவயினும் தன் பணியாகாது சிவப் பணியாகவே சிறக்கும். இவ் வுண்மை 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்னும் செந்தமிழ்ச் சிறப்பு மறையின் சீர்மையான் உணரலாம் ஈண்டுக்கிய்பது இன்னும் பணி யாது என அன்பும் பணிவும் இன்பும் உடையராய் எதிர்நோக்கிப் பணி என நிற்பது. அவ் வுண்மை வரங்கிடப்பது, பாடுகிடப்பது என்பனவற்றானுணரலாம். மேலும் கிடப்பது என்பது தற்செயலற்றுத் தலைவன் கற்பிக்கும் பொற்செயல் நோக்கி நிற்பதென்பதுமாகும். பெற்றோர்கள் வழிப் பிள்ளைகளும், கற்பிப்பார்வழிக் கற்பாரும், முதியோர்வழி இளைஞரும், மருத்துவன்வழி நோயாளரும், தெய்வத்தின்வழித் தெய்வமுற்றோனும் இன்னும் இவர் போன்ற பிறரும் இன்புற்றுச் சென்று தொழுது ஒழுகும் செம்மையும் இதனை வலியுறுத்தும். பிறத்தலான் என்பது திருவாணை அகத்தினின்றும் அறிவிற்றொன்று தலான் என்பது ஆகும். ஒட்டு நிலையாகிய திருவடிப் பேற்றின்கண் ஆருயிர்களின் அறிவு அன்பு ஆற்றல் ஆகிய மூன்றும் விழுமிய முழுமுதற் சிவபெருமானை அவன் திருவருளால் ஆருயிர்கள் முறையே அயரா நினைவோடிருக்கு


1. வான்வந்த. 8. திருவம்மானை, 4.

2. யாதே. அப்பர், 5. 50 - 6.

" காணுங.் சிவஞானபோதம், 11.

" நஞ்செய. திருவுந்தியார், 6.

" சிவன்முதலே. திருக்களிற்றுப்படியார், 64.

" அஞ்செழுத். 12. சிறப்புலிநாயனார், 5.