1121
 

(அ. சி.) நாற்பதம் - சரியையாதி நான்குபதம் தழலந்தம் - ஓமாக்கினி.

(8)

2711. தேவரோ டாடித் திருவம்பலத் தாடி
மூவரோ டாடி முனிசனத் தோடாடிப்
1பாவினுள் ஆடிப் பராசத் தியிலாடிக்
கோவினுள் ஆடிடுங் கூத்தப் பிரானன்றே.

(ப. இ.) நால் வேறியற்கைப் பதினொரு மூவர் என்று சொல்லப்படும் தேவரோடு ஆடியருளுகின்றனன் சிவன். அவனே திரு அம்பலத்தின் கண்ணும் ஆடியருளுகின்றனன். இருபத்து நான்காம் மெய்யாகக் கருதப்படும் குணமெய்யின்கண் உள்ளாராகிய, சிவபெருமான் திருவாணையான் முத்தொழிற்குரிய அயன், அரி, அரன் என்னும் மூவருடனும் ஆடியருளுகின்றனன். முனிவர் கூட்டத்துடனும் ஆடியருளுகின்றனன். செந்தமிழ்த் திருமுறைத் திருப்பாட்டுக்களுடனும் ஆடியருளுகின்றனன். திருமுறைப் பாவின் செழும் பொருளாய் விளங்கியருள்பவள் திருவருளம்மை. அவளுடனும் ஆடியருளுகின்றனன். கோ என்று சொல்லப்படும் ஆருயிரின் கண்ணும் ஆடியருள்கின்றனன். கோ - இயமானன்.

(அ. சி.) மூவர் - அயன், அரி, அரன். முனிசனம் - தவத்தர். கோவினுள் - சீவனுள்.

(9)

2712. ஆறு 2முகத்தில் அதிபதி நானென்றுங்
கூறு சமயக் குருபரன் நானென்றுந்
தேறினர் தெற்குத் திருஅம்ப லத்துளே
வேறின்றி யண்ணல் விளங்கிநின் றானன்றே.

(ப. இ.) ஆறு திருமுகங்களையுடைய அருளார் திருவுருவினுக்குரிய செம்பொருட் செல்வனும் விழுமிய. முழுமுதல்வனாம் சிவபெருமானேயாவன். அவனே அம்பலவாணனாவன். 2693-இல் ஓதப்பெற்ற ஐந்து திருமுகங்களுடன் மறைவாகக் கீழ்நோக்கிய திருமுகம் ஒன்றுங்கூட்டித் திருமுகங்கள் ஆறாகும். மறைமுகம் அருமறை யருளும் துறைமுகமாகும். அருமறை - உபதேசம். ஒருபுடையொப்பாக ஐந்து திருமுகங்களும் ஐந்தொழிலுக்கும் அமைந்தனவாகும். அவை வருமாறு: மேற்குமுகம் படைத்தல், கிழக்குமுகம் காத்தல், தெற்குமுகம் துடைத்தல், வடக்கு முகம் மறைத்தல், உச்சிமுகம் அருளல் என்ப. எனவே ஆறாவது திருமுகம் சிவகுரு. ஆறு திருமுகக் குறிப்பு ஆறு ஆதாரங்களைக் குறிக்கும் உண்மையாகும். அவ் வுரு 'குமரகுருபரன்' என இருவகை வழக்கிலும் பெருக வழங்குவதானானும் உணரலாம். மேலும் அவ் வுண்மை வரும் அப்பர் அருண்மொழியானும் உணரலாம்:


1. பண்ணிற். அப்பர், 5. 44 - 8.

" கந்தமலர்க். " 6. 84 - 4.

2. ஆறுகொ. அப்பர், 4. 18 - 6.

" தக்கனது. " 6. 74 - 7.

" முகம்விழி - திருத்தணிகை புரா. சீபரிபூரணநாமப்படலம் - 183.