படுவன். அவன்மாட்டு என்னுடைய அளவிலாப் பேரன்பு பிரிவிலாக் கலப்பாகப் பின்னிக் கிடந்தது. மிளிரும்: விளங்குகின்ற. பின்னல் - கலப்பு; அத்துவிதம். அசைக்கும் புலித்தோல் அகன்ற வெகுளி, இசைக்கும் உருவகமாம் எண். (அ. சி.) சுடுபொடி - நீறு. பின்னிக் கிடந்தது - சேர்ந்திருந்தது. (2) 259. என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப் பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் அன்போ டுருகி அகங்குழை வார்க்கன்றி1 என்போல் மணியினை2 எய்தவொண் ணாதே. (ப. இ.) 'விரதமே பரமாக வேதியரும், சரத மாகவே சாத்திரங் காட்டுவர்.' அவர் காட்டு மவ்விரதமும், 'நரிவிருத்தமதாக, எரி பெருக்கும் வேள்வியும்' ஈண்டு என்பே விறகாய் தன் இறைச்சியைத் தானே அறுத்திட்டுப் பொன்போற் கனலில் வறுப்பதெனக் கூறப்பட்டன. அவர்கள் தமக்கும் அன்பிலர், எவ்வுயிர்க்கும் அன்பிலர், அடியவர்க் கன்பிலர்; அம் முறையான் ஈசனுக்கும் அன்பிலாராவர். அன்பில்லாத அவர்கள் எத்துணை வல்வினை செய்யினும் இன்ப வடிவினனான சிவன் அவர்கள்முன் வெளிப்படான்; என்னைப்போல அன்போடுருகி அகங்குழைவார்க்கே வெளிப்பட்டருள்வன்; அடியேனுக்கும் வெளிப்பட்டருளினன்; அதனால் யான் எய்தியதுபோல் மனமணி இலிங்கமாகிய சிவபெருமானை ஆருயிர்கள் மாட்டுச் சிறிதும் அன்பிலாதாரால் பெற முடியாதென்க; ஆருயிர்கள் மாட்டு அன்புடையாரே இன்பமாகிய சிவனைப் பெறுவர். அவ் உண்மை வரும் தாயுமானச் செல்வர் திருமொழியான் உணர்க. 'அன்பர்பணி செய்யஎனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே' - தாயுமானார், 155. மணி - சிவன். என்போல் - யான் அடைந்ததுபோல். குழைவு - பத்தி. (அ. சி.) என்பொன்மணி - சிவம். (3) 260. ஆர்வம் உடையவர் காண்பர் அரன்தன்னை ஈரம் உடையவர்3 காண்பார் இணையடி பாரம்4 உடையவர் காண்பார் பவந்தன்னைக் கோர நெருக்கொடு கோங்குபுக் காரே. (ப. இ.) சிவக்கொழுந்தின்மாட்டு வைக்கும் அன்பாகிய தவம், சிவபெருமான் மாட்டுச் செல்லும் ஆர்வத்தினை விளைக்கும். அத்தகைய
1. ஈசனுக்கன், சிவஞான சித்தியார், 12. 2 - 1. " அன்பி. அப்பர், 5. 80 - 3. 2. காயமே"4. 76 - 4. 3. ஆரங். 12. திருக்கூட்டச் சிறப்பு, 9. 4. எத்தாயர். அப்பர், 6. 62 - 1. " மற்றுந். திருக்குறள், 345.
|