1134
 

2740. புரிந்தவன் ஆடிற் புவனங்க ளாடுந்
தெரிந்தவன் ஆடும் அளவெங்கள் சிந்தை
புரிந்தவ னாடிற்பல் பூதங்கள் ஆடும்
எரிந்தவன் ஆடல்கண் டின்புற்ற 1வாறே.

(ப. இ.) சிவபெருமான் புரிதலாகிய திருவுள்ளங்கொண்டு உலகு தொழிற்பட வேண்டுமென நோக்கல் நோக்காகிய ஆடுதலைப் புரிவன். புரியவே புவனங்கள் ஆடும். இயற்கை யுணர்வும் முற்று முணரும் முழுமுதற்றன்மையும் இயல்பாக வாய்ந்த விழுமியோன் சிவன். அதனால் அவன் அனைத்துந் தெரிந்த அருளாளனாவன். அவன் ஆடுமளவும் எங்கள் சிந்தையும் ஆடும். இதற்கு ஒப்புப் பகலும் நிலவும், விளக்கும் உள்ள துணையும் கண்ணும் கருத்தும் அண்ணித் தொழிற்பட்டு இன்பம் நண்ணுவதாகும். புரிந்தவனாகிய சிவபெருமான் ஆடில் பல பூதங்களும் ஆடும். இயற்கைப் பேரறிவுப் பேரொளி வண்ணன் சிவபெருமான். அதனால் அவன் எரிந்தவன் என ஓதப்பெற்றனன். அல்லதூஉம் மலமாயை கன்மமாகிய முப்புரங்களையும் எரிந்தவன் எனினும் அமையும். இப் பொருட்குப் பிறவினை தன்வினையாக நின்றதெனக் கொள்க. அத்தகைய பெரும் பொருட் கிளவியான்றன் பேரருள் ஆடலைக் கண்டு அனைத்துயிரும் இன்புற்றன என்க.

(அ. சி.) புரிந்து - விரும்பி. எரிந்தவன் - தீப்பிழம்பாயுள்ள சிவன்.

(25)

2741. ஆதி நடஞ்செய்தான் என்பர்கள் ஆதர்கள்
ஆதி நடஞ்செய்கை யாரும் அறிகிலர்
ஆதி நடமாட லாரும் அறிந்தபின்
ஆதி நடமாட லாமருட் 2சத்தியே.

(ப. இ.) மேலோதிய வுண்மையினை உள்ளவாறுணரும் நல்லறி வில்லாத புல்லறிவாளர்கள் ஆதியைப் பாதித் திருமேனியாகவுடைய சிவபெருமான் ஏனையோரைப்போலத் தன் பொருட்டு நடம் புரிகின்றனன் என்பர். அப் பெருமானார் 'அவையே தானேயாய்' நின்று திருவருளாடல் புரியும் உண்மை நுண்மைச் செய்கையினை அவனருளிலார் யாரும் அறிகிலர். அவன்றன் திருவாடலை அவனருளால் அறியும் பேறு பெற்றபின் அவ் வாடல் அருட் சத்தியினால் நிகழ்வதென்னும் உண்மையினையும், அதுவும் ஆருயிர்களின் உய்வின்பொருட்டு என்னும் நன்மையினையும் கண்டு புகழ்வர். தாமும் திருவருள் வண்ணமாகத் திகழ்வர்.

(26)

2742. ஒன்பதோ டொன்பதாம் உற்ற இருபதத்து
அன்புறு கோணம் அசிபதத் தாடிடத்
துன்புறு சத்தியுள் தோன்றிநின் றாடவே
அன்புறு எந்தைநின் றாடலுற் றானன்றே.


1. நோக்காது. சிவஞானபோதம், 1. 2 - 3.

" கரும்பினு அப்பர், 4. 74 - 3.

" சாட.. " " 81 - 10.

" மழுவமந். சம்பந்துர், 3. 8 - 4.

2. சிவனரு. சிவஞானசித்தியார், 1. 3 - 11.