2749. நாதத் துவங்கடந் தாதி மறைநம்பி பூதத் துவத்தே பொலிந்தின்பம் எய்தினர் நேதத் துவமும் அவற்றொடு நேதியும் பேதப் படாவண்ணம் பின்னிநின் 1றானன்றே. (ப. இ.) நாததத்துவங்கடந்த ஆதியாகிய அம்மையோடுகூடிய சிவபெருமான் வேதப்பொருளாய் விளங்கும் நம்பியாவன். அவனை அருளால் கண்டு அடிபணிந்தோர் அழகிய சிவதத்துவத்தின்கண் சிறந்து எய்தி இன்புற்றனர். நேதத்துவமாகிய தத்துவ நீக்கச் சுத்தியும் நேதி செய்வதாகிய அன்று அன்று என விலக்கும் நேதியும் அம் மெய்யுணர்ந்தார் கைக்கொண்டனர். அவர்கள் அவ்வுண்மையினை எய்தும் பொருட்டுச் சிவபெருமான் திருவருளால் அம்மெய்யுணர்ந்தாருடன் வேறறப் புணர்ந்து நின்றருளினன். புணர்ப்பு, பின்னல் அத்துவிதம் என்னும் பொருளுண்மையினை அறுதியிட்டுக் கூறும் உறுதியுரையாகும். (அ. சி.) நாதத்துவம் - நாத தத்துவம். நேதத்துவமும் பிரிக்கப்படுவன். நேதி - பிரிப்பது. (34) 2750. ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர் ஆனந்த மாநட மாரும் அறிகிலர் ஆனந்த மாநட மாரும் அறிந்தபின் தானந்தம் அற்றிடம் ஆனந்த மாகுமே. (ப. இ.) இன்பம் இன்பம் என்று உண்மை காணாது அறிவிலார் உரைப்பர். ஆனந்தமாகிய இன்பம் மெய்யுணர்வுமாநடத்தின்கண் உள்ளது என்னும் உண்மையை யாரும் அறிகிலர். ஆனந்த மாநடம் அஃதென்னும் உண்மையை யாரும் அறிந்தபின் தன்முனைப்பு அறும். அறவே பசையாகிய பழக்கவாசனையும் அறும். அந்த இடமே திருவடிப் பேரின்பம் அருளால் பொருந்தும் ஒரு பெருநிலைக்களமாகும். ஆனந்தம்: ஆன் + நந்தம். நந்தம் - பெருக்கம். ஆவியின் இன்பப் பெருக்கம். (அ. சி.) தான் - ஆன்மா. அந்தம் - முடிவு. (35) 2751. திருந்துநற் சீயென் றுதறிய கையும் அருந்தவர் வாவென் றணைத்த மலர்க்கையும் பொருந்தில் இமைப்பிலி யவ்வென்ற பொற்கையுந் திருந்தத்தீ யாகுந் திருநிலை 2மவ்வே. (ப. இ.) முன் (2672) ஓதியவாறு மந்திரங்களை மறைவாக ஓதும் முறை பற்றி எழுத்துக்களின் மாத்திரைகளைக் கூட்டியும் குறைத்தும் வழங்குவர். அம்முறை பற்றி இத் திருப்பாட்டின்கண் சிகரம் சீகாரமாக
1. சன்மார்க்கம். சிவஞானசித்தியார், 8. 2 - 12. 2. நாயோட்டு. 10. திருமூலர், 2672. " ஒன்றி. அப்பர், 4. 81 - 2.
|