1162
 

2802. ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறு மீதென்றே
ஏமாப்ப தில்லை இனியோ ரிடமில்லை
நாமா முதல்வனும் நானென லாகுமே.

(ப. இ.) திருவருள் துணையால் உயிரினுக்கு உயிராய் அகத்தே நிற்கும் அரும்பொருளாகிய சிவபெருமானைக் கண்டுகொண்டேன். கண்டதும், அவனுடன் கலந்து போமாறும் புகுமாறும் ஈதென்றே அறிந்துள்ளேன். அதனால் செருக்குறுவதில்லை. விட்டு நீங்கி ஒட்டி வாழ்வதற்குச் சிவபெருமான் திருவடியையன்றி வேறோர் இடமில்லை. சிவபெருமான் தண்ணருளால் நம்முடன் கலந்து நம்மையும் அவன் வண்ணமாகச் செய்தருளினன். அதனால் நாமும் அவனென்றே கூறும் அருள் உரிமையையும் பொருளாகப் பெற்றுள்ளோம். பேரருள் கூர்ந்து அறியாமை வயப்பட்டு நிற்கும் மாணவர்களை வலிய அழைத்துக் கற்பித்து அறிவுடையவர்களாக்கித் தன்போல் விளக்கமுறச் செய்கின்றனன் பேராசான். அந்நிலையில் அம் மாணவர்களும் அறிவு விளக்கம் விளங்கப் பெற்றவராய்த் திகழ்கின்றனர். அப்பொழுது அவர்களும் அறிவுடையாசான் என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலை மேலதற்கு ஒப்பாகும்.

(அ. சி.) போமாறு - புகுமாறு, ஊன் உயிர் வேறுபடவும் கூடவும்.

(12)


13. ஊழ்

2803. செற்றிலென் சீவிலென் செஞ்சாந் தணியிலென்
மத்தகத் தேயுளி நாட்டி மறிக்கிலென்
வித்தகன் நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் 1றாரன்றே.

(ப. இ.) உள்ளம் திருவருள் வயப்பட்டு ஒழுகும் விழுமிய தொண்டர்கள் தங்கள் உடம்புக்கு என்ன நேர்ந்தாலும் மனங்கொள்ளார். விற்ற வீட்டை வாங்கினவன் இடிக்கும் பொழுதும் புதுப்பிக்கும் பொழுதும் விற்றவனுக்கு முறையே புலம்பலும் மகிழ்வும் ஏற்படாமலிருப்பன இதற்கு ஒப்பாகும். கருமமே கண்ணாயினார்க்கு முயற்சியான் வரும் மெய் வருத்தம் அவர்தம் உள்ளத்தைத் தாக்காமையும் இதற்கு ஒப்பாகும். திருவருளால் மெய்யுணர்ந்து நன்னெறி நான்மைக்கண் நின்று இடையறாது ஒழுகும் ஒழுக்கமுடைய உரவோர்பால் அறியாமையால் பகைமை பூண்டு அவர்தம் உடம்பினைக் கூரிய கருவி கொண்டு செதுக்கினால்தான் என்ன? அல்லது சீவினால்தான் என்ன? உண்மையுணர்ந்து பேரன்பால் அவர் தமக்கு அடிமை பூண்டு செஞ்சாந்தினை நறுமணக் கலவை கூட்டி உறுமகிழ்வுடன் இனிது மொழிந்து கனிமனத்தினராய் நனிமிகப்


1. கொள்ளேன். 8. மெய்யுணர்தல், 2.

" ஊழையு. திருக்குறள், 620.

" வாய்ச்சிவா. சீவக, 2825.

" ஆண்டவர. 12. திருநாவுக்கரசர், 97.