1163
 

பூசினால் தான் என்ன? உச்சித்துளையின்கண் வைரமிக்க ஆப்பினையும் பிளக்கும் வன்மை வாய்ந்த கூரிய உளியினையும் நாட்டி அடித்தால்தான் என்ன? வியத்தகும் அருளிப்பாடுடைய நந்தியின் திருவடியினை நினைந்து நிகழ்ந்தது ஏதும் உணராது அத் திருவடி நினைவு மாறாத ஒழுக்கத்தின் வழியே நிற்பர். அங்ஙனமன்றித் தம் தன்மையில் என்றும் குன்றா இயல்பினராவர். இவர்நிலை அகத்தவத்தோர், ஐந்தாம் உடம்பாகிய இன்பஉடம்பின் கண்ணிற்கும் எழினிலையாகும்.

(அ. சி.) செற்றிலென் - செதுக்கினால் என். மறிக்கில் - அடித்தால்.

(1)

2804. தான்முன்னஞ் செய்த விதிவழி தானல்லால்
வான்முன்னஞ் செய்தங்கு வைத்ததோர் 1மாட்டில்லை
கோன்முன்னஞ் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னஞ் செய்ததே நன்னில மானதே.

(ப. இ.) உயிர் தான் முன் செய்த வினைக்கீடாகப் பயனைச் சிவபெருமான் வரையறுப்பான் என்பதை உணர்தல் வேண்டும். அதுவே விதி என்றும் ஊழ் என்றும் உரைக்கப்படும். அம் முறையானன்றி மேன்மை மிக்க சிவபெருமான் தானாகவே செய்தமைத்ததோர் விதித் தொடர்பு ஏதும் இன்று கோனாகிய சிவபெருமான் திருமுன் நன்னெறி நான்மைக் குறிவழியே சென்று சென்னிவணங்கித் திருவடி பணிந்தேன். அப் பணிவினால் நான் கருதிச் செய்தது திருத்தொண்டாயது. அதனால் என் உள்ளம் சிவன் தங்கும் நன்னிலமாயது. ஊழின் தன்மையினை வருமாறு நினைவுகூர்க: 'நீங்கா வினைப்பயனே நேரும்ஊழ் மற்றுவினை, ஈங்கறிவால் நாமாக்கல்எண்.'

(அ. சி.) முன்னம் - முன் பிறப்புக்களில். விதி - கன்மபலனை அனுபவிக்க ஈசனால் விதிக்கப்பட்ட. வான் - மேன்மை உள்ளதாக. மாட்டு - சம்பந்தம். கோன் - சிவன். முன்னம் - சந்நிதானத்தில்.

(2)

2805. ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தறி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியைப்
பேறிட்டென் னுள்ளம் பிரியகி 2லாவன்றே.

(ப. இ.) திருவாணையின் வழி அவரவர் செய்த வினைப்பயனை அவரவரே நுகர்வர். அப் பயனைக் கூறிட்டுக்கொண்டு நுகர்வார் எவருமிலர். அங்ஙனம் நுகர்விப்பதும் நடுநிலை முறைமையாகாது. வெள்ளப் பெருக்கினால் ஆற்றின்கண் மேடுபள்ளங்கள் உண்டாகின்றன. அவற்றைத் தாங்கி நிற்பது அவ்வாறே யன்றிப் பிறிதன்று என்க. ஆறொக்கும்உயிர், ஆற்றின் நீரொக்கும் வினை, வினையின்வகையொக்கும் மேடுபள்ளங்கள்.


1. பெரியாரைப். திருக்குறள், 892.

" பரியினும். " 376.

" வகுத்தான். " 377.

2. யாதுமூரே. புறநானூறு, 192.

" ஆறிடு. நல்வழி, 32.

" செய்வினையும். 12. சாக்கியநாயனார், 5.