1172
 

2823. சித்தஞ் சிவமாம் 1சிவஞானி சேர்விடம்
சத்தச் சிவாலயம் தொல்பாச நாசமாம்
அத்த மழையகம் அனந்த மேலிடும்
முத்தம் பெருகும் முழுப்பொரு ளாகுமே.

(ப. இ.) மறவா நினைவால் சிவநாட்டமே மிக்குடையார் சிவஞானியாவர். அவர் சேரும் திருவிடம் இயற்கை உண்மை அறிவுப் பெருங்கோவிலாகும். அத் திருக் கோவிலினைக் கேட்டாலும் கண்டாலும் நாட்டமுற்று வழிபட்டாலும் வாட்டமுறச் செய்யும் பழமலங்களெல்லாம் அழிந்தடங்கும். பேரூழிக்கால எல்லையில் மழைபோன்று உள்ள முழுவதும் திருவடிப் பேரின்பப் பெருவெள்ளம் மிகும். அளவிலா அழிவிலா உளமகிழ் பேரின்பம் முத்தம் போன்று பெருகும். அவ் வுயிரும் முழுப் பொருளாகிய சிவனாம் விழுப் பொருளைச் சார்ந்தமையால் முழுப் பொருளாம் விழுப்பொருளாகும். இந் நிலையினையே "சிவமாக்கி எனையாண்ட அத்தன்" எனச் செந்தமிழ்த் திருமறை முடிவு ஓதியருளிச் செப்பா நிற்கும். முத்தம் - முத்து.

(3)

2824. ஆணவ மூலத் தகார முதித்திடப்
பேணி யுகாரங் கலாதி பிறிவிக்கத்
தாணு மகாரஞ் சதாசிவ மாகவே
ஆணவ பாச மடர்தல்செய் யாவன்றே.

(ப. இ.) மூலாதாரத்தினிடத்து அகரந் தோன்றுகின்றது. அங்கு நின்றே ஆணவ மூலமும் தோன்றுகின்றது. ஆருயிர் அகர நிலையில் நிற்குங்கால் ஆணவம் அடங்கிவிடும். உகாரம் பேணி ஒன்றாம் கலாதியினைப் பிறிவித்திடும். மகரம் தாணுவாகக் காணப்படும் சதாசிவமாக நின்று எல்லாவற்றையும் ஒடுக்கி அருள் புரியும். மகரம் இனம்பற்றி மாயையின் மூலப்பகுதி யொடுக்கமாகக் கொள்க. இம் முறையால் ஆணவமாகிய கட்டு அடர்தல் செய்யாது.

(4)

2825. நெற்றி நடுவுள் நினைவெழு கண்டமும்
உற்ற விதையமு மோதிய நாபிக்கீழ்ப்
பெற்ற துரியமும் பேசிய மூலத்தே
உற்ற அதீதம் ஒடுங்கும் உடனன்றே.

(ப. இ.) நெற்றியின் நடுவுள் வெளிப்படும் நினைவு உண்டாம். இதுவே நனவாகிய சாக்கிரமாகும். கண்டமாகிய கழுத்தின்கண் எழு நினைவு ஆகிய கனவுண்டாம். இது சொப்பனம் எனப்படும். பொருந்திய நெஞ்சத்தினிடத்து உறக்கம் எனப்படும் சுழுத்திநிலை உண்டாம். கொப்பூழின் கீழ்ப் பேருறக்கமாகிய துரியநிலை உண்டாகும். சொல்லப்படும் மூலத்திடத்து உயிர்ப்படங்குதலாகிய துரியாதீத நிலை உண்டாகும்.

(5)


1. புத்தன். 8. திருத்தோணோக்கம், 6.