யடங்கினால் அப் பசுக்கள் அவ் வுயிர் சிவப்புலனை நுகருமாறு துணை நிற்கும். அப் பசுக்கள் பாலாகச் சொரியுமென்பது பாலை முகந்து வாக்கும் வெண்பொற்கரண்டியே பாலைச் சொரிகின்ற தென்பதனை யொக்கும். அப் புலன்கள் திருவடியின்பத்தினை நுகரத் துணைநிற்கும். துணைநிற்பதால் பாலுடன் விரவிநிற்கும் கரண்டி பால்வண்ணமாவது போன்று அப்புலன்களும் சிவவண்ணமாகும். இதுவே பசு கரணங்கள் பதிகரணங்களாகத் திரியுமென்பதாகும். (அ. சி.) பார்ப்பான் அகம் - பிரமனால் படைக்கப்பட்ட சரீரம். பாற்பசு ஐந்து - ஐம்பொறிகள். பால் - ஆனந்தம். (18) 2844. ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதுந் தேமா இரண்டொடு திப்பிலி யொன்பதுந் தாமாக் குரங்கொளிற் றம்மனத் துள்ளன மூவாக் கடாவிடின் மூட்டுகின் 1றாரன்றே. (ப. இ.) உயிர்க்காற்று, மலக்காற்று, ஒலிக்காற்று, நிரவுகாற்று, தொழிற்காற்று ஆகிய ஐந்தும் ஆமாக்களையொக்கும். ஆமா - காட்டுப்பசு, அறிதற்கருவியாகிய செவி, மெய், நோக்கு, நாக்கு, மூக்கு என்னும் ஐந்தும், செய்தற்கருவியாகிய, வாய், கால், கை, எருவாய், கருவாய் என்னும் ஐந்தும்; எண்ணம், எழுச்சி, இறப்பு என்னும் மூன்றம் ஆகிய பதின்மூன்றும் அரியேறு ஒக்கும். தேமா என்பது தே + மா எனப் பிரிந்து முறையே இனிப்பும் புளிப்பும் எனவும் பொருள்தரும். இனிப்பு, இன்பத்தினையும், புளிப்பு, துன்பத்தினையும் குறிக்கும் குறிப்பாகும். அவ் விரண்டனையும் திருவடியுணர்வால் ஒப்பக் கருதுதல் இருவினையொப்பாகும். வாய் பூசுதலும் கால் கழுவுதலும் மணத்தால் நேர்மாறானவையாகும். எனினும் ஒப்பக்கருதிச் செய்யும் கடமைச் செயலாவதன்றிப் பிறிதுண்டோ? அம்மட்டோ, இரண்டனையும் கழுவியகற்றுவதன்றி வேறென்செய்குவம். இரண்டனையும் வழுவென்று ஒப்பக்கொள்ளாது முரண்படுவாருண்டோ? உயிர்வாழ வேண்டுமென்னும் ஒருநோக்கத்தால் இரண்டையும் இயற்றிவருகின்றனம். அதுபோல் திருவடி சேரவேண்டுமென்னும் ஒருபெரு நோக்கத்தால் 'சித்தம் சிவனொடும் ஆட ஆட....பிறவி பிறரொடும் ஆட ஆட' நிற்கும் நல்லார் உடலூழாய்க் கொண்டு இருவினையொப்பு எய்துவர் திப்பிலி திப்பி-கோது. இலி - இல்லாதது. எனவே கோதற்றது. குற்றமற்றது என்றாகும். சுக்கு மிளகு திப்பிலி மூன்றும் முறையே வாதம், பித்தம், கோழை மூன்றற்கும் மாற்று மருந்தாகும். இம் மூன்றனுள் கோழையே மிகக் கொடுமை வாய்ந்தது. அதுவே இறப்பினைத் தருவது. அதனை நீக்குவது திப்பிலி. இவ்வொப்பையொத்த பண்புகள் வருமாறு: நினைத்தல், கற்றல், நெடும் புகழ் உரைத்தல், தொண்டுபுரிதல், மலர்தூவிப் போற்றல், நட்டம், வணங்கல், நாடியின்புறல், முனைப்பறல் என்னும் ஒன்பதும் அரும்பெரும் பண்புகளாகும். இவையே திப்பிலி என்ப. இவை நம்மனத்து நினைத்து எல்லைப்பட்டு நம்வயப்படுதல்வேண்டும். அப்பொழுது செருக்கு முதலிய அறுபகையும் அகன்று அறும். என்றும் கெடாத பற்றறுதி என்னும் வைராக்கியம் கடா எனப்பட்டது. விடின் - அதனைக் கைவிட்டால் அறுபகையும் மூளச் செய்கின்றவராவர்.
1. முத்தணி. 8. திருப்பொற்சுண்ணம், 10.
|