வதற்கு அருமையானவன் என்று நினைத்து யாரும் மனத்தளர்வு கொள்ளுதல் வேண்டா. பேரன்பாகிய காதல் உடையார்க்கு அவர் வேண்டியவாறு திருவுருக்கொண்டு வந்து அருளுதலில் ஒருஞான்றும் தவறுதலைச் செய்யான். அவனே அழியாச் செல்வநிறை ஆண்டவன். அவன் அன்புடன் உயிர்க்கு உயிராய் நின்று வேண்டுவன அறிந்து ஆங்காங்கு அவ்வப்பொழுதே அருள் செய்கின்றனன் திரிபுரம் - உடல். (2) 335. ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும் ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும் ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே. (ப. இ.) அறிவுப்பேரொளியாய் ஒளிக்குள் ஒளியாய் நின்றருளும் ஆதியாகிய சிவபெருமானை எல்லை காண வொண்ணாத கடல் போன்ற வெற்றியினையுடைய அயன் மால் ஆகிய. இருவரும் நெடுங்காலம் வலம் வந்து வழிபாடு செய்தனர். அச் சிவபெருமானும் அவ் வழிபாட்டை ஏற்றருளி அச்சுதனாகிய திருமாலுக்கு ஆழிப்படை அருளினன். ஆழி - சக்கரம். அது போல் பிரமனாகிய நான்முகனுக்கும் வாள் கொடுத்தருளினன் ஆழி ஆற்றற்கருவியாகவும் வாள் அறிவுக் கருவியாகவும் கொள்க. (3) 336. தாங்கி இருபது தோளுந் தடவரை ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின் நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே.1 (ப. இ.) இயற்கைத் திருவெள்ளி மலைக்கண் செயற்கைக் கைலாய மலையை இருபது தோளுடைய இலங்கையர் வேந்தன் தாங்கி எடுக்கலுற்றனன். சிவபெருமான் விரல் நுதியால் சிறிது அழுத்தினன் அதனால் இராவணன் நைந்து குருதி கொப்புளிக்கப் பெரிதும் வருந்தினன். அவன் தன் கைந்நரம்பெடுத்து யாழமைத்துத் திருவைந்தெழுத்தை யோதிக் கீதம்பாடி வழிபட்டனன். அவ் வழிபாட்டிற்கு மகிழ்ந்து சிவபெருமான் அவனுக்கு நாளும் வாளும் கொடுத்தருளினன். அமரா - ஈறிலா இறையே. (4) 337. உறுவ(து) அறிதண்டி ஒண்மணற் கூட்டி அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே2
1. கரத்தினார், கடுத்த சம்பந்தர், 3. 29, 8. " 119 - 8. " கடுகிய. அப்பர், 4. 14 - 11. " பரக்கும். சம்பந்தர், 1 . 70 - 8. 2. தழைத்ததோ. அப்பர், 4 . 49 - 3. " அண்டர் 12. சண்டேசுரர். " கடிசேர்ந்த சம்பந்தர், 3 . 55 - 8.
|