166
 

மேற்செல; ஆராய்ந்து செல்லுந்தோறும் மேலும் மேலும் வளர்ந்து செல்ல. நன்றாங் கழலடி - பிறவிப் பிணிக்கு மருந்தாய நற்றாள்.

(5)

363. சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றானும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்
தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே.

(ப. இ.) எங்கும் நிறைந்து நீக்கமின்றி விளங்கும் சிவபெருமான் திருவடியை ஏத்துகின்ற வானவக் கூட்டத்தாரும், மாவலிபால் வஞ்சனையாகக் குறுகிச் சென்று மூவடி மண்ணிரந்த மாலும், முனிவரும், வேதம் பாடும் நான்முகனும், தேடியலைந்தும் முடிவு காணாது எய்த்தனர். பாவடி - கீதவடிவான வேதம். தாவடியிட்டும் - அலைந்து திரிந்தும். தலைப்பு - ஒளிப்பிழம்பின் கீழும் மேலும் ஆகிய முடிவிடம்.

(அ. சி.) செறிவுடை - கூட்டமாகிய. மூவடி தா என்றான்: வாமனன். பாவடி . . செய் - வேதமோதும். தாவடி . . மாறே - அடியையும் முடியையும் எய்துமாறு.

(6)

364. தானக் கமலத் திருந்த சதுமுகன்
தானக் கருங்கட லூழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும்பொருள் தன்மைய தாமே.

(ப. இ.) செந்தாமரையை உறைவிடமாகக் கொண்டு தங்கும் நான்முகனுக்கும், அதுபோல் கருங்கடலை உறைவிடமாகக் கொண்டு தங்கும் மாலுக்கும், ஊழித் தலைவனாகிய உருத்திரனுக்கும், அவரவர்தம் உடம்பினுள் உயிர் உறைவது போல் அவரவருயிர்க்கு உயிராய் உறைதலைச் செய்வதான பெரும் பொருள் சிவபெருமான் ஆவன். அனைவரும் அவன் தன்மையராய் அவன் ஆட்டுவித்தவண்ணம் ஆடும் உயிரினத்தராவர். கருங்கடல் ஊழித் தலைவன். கருங்கடல் தலைவன் - அரி. ஊழித் தலைவன் - அரன்.

(7)

365. ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்
மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்கண்டு
ஆலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்
கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே.

(ப. இ.) சிவபெருமான் உயிர்ப்பொருள் உயிரல் பொருள் எல்லாவற்றுடனும் இயற்கை உண்மைப் புணர்ப்பாய் வேறறநிறைந்து நிற்கின்றனன். இந் நிலையைச் சுத்தாத்துவிதம் என்ப. இதனையே ஆலிங்கனம் என்ப. இங்ஙனம் திகழும் அச் சிவன் இயற்கைப் பேரறிவுப் பேரொளிப் பெரும் பொருளாவன். 'அவன் ஆருயிர் தன் திருவடியைச் சார்தற் பொருட்டுச் செந்நெறியாகிய மெய்ந்நெறியை அமைத்தருளினன். அந்நன்னெறியினைத் திருவருளால் முனைத்துக் கண்டு தழுவி உயர்ந்தோர் வலம் வருவர். சிவபெருமான் திருவடியைத் தலைக்கூடுதற்குச் சிறந்த செந்தமிழடையாளமாகிய 'சிவயநம' என்னும் திருவைந்தெழுத்து