175
 

(ப. இ.) ஒருவன் ஒருத்தியாகிய சிவபெருமானும் சிவையும் ஆருயிர்கள் உய்யும் பொருட்டுக் 'காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடு'தலாகிய திருவருளைப் புரிவர். விளையாடுதல்; தற்பயன் கருதாது பிறர் பயன் நாடி எளிதாகவும் இனிதாகவும், விழைவுடனும், தொடக்குணாதும், பகையாதும் புரியும் வெற்றிச் செயல். இவ் விளையாட்டினை அருளிப்பாடு என்று கூறுதலே அமைவுடைத்து. இவ்விருவர் அருளிப் பாட்டினால் பருவங்கள் தோறும் பயன் பலவாக விளையும் அனைத்தும் நிகழ்வனவாகும். திருவாகிய நடப்பாற்றல் மாயையுடன் திருவுள்ளம் ஒன்றுதலாகிய உன் முகத்தைச் செய்தருளின் உலகமெலாம் தோன்றி நின்று நிகழும் என்க.

(அ. சி.) திரு ஒன்றில் - சத்தி சிவத்தோடும் கூடில்.

(16)

384. புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.

(ப. இ.) புவனாபதி அண்ணலாகிய அரனிடமாகச் சிவபெருமான் உயிர்க்கு உயிராய்ப் புகுந்து நின்று அவன் தொழிலை உணர்த்தியும் உணர்ந்தும் அருள்வன். அதுபோல் சக்கரத் தண்ணலாகிய அரியினிடமாக நின்றும் அருள்வன். அதுபோல் செந்தாமரை மேல் உறைவானாகிய அயனிடத்தும் அவ்வாறே நின்றருள்வன். இம் முத்திறத்தோரும் புகுந்தறிந்து முடிப்பிக்கும் சிவபெருமானின் முடித்தலாகிய நிறை வேற்றுதற்குக் கருவியாகி நின்றனர். புவனாபதி - உலக முதல்வியின் முதல்வன் என்றலுமாம்.

(அ. சி.) புவனாபதி அண்ணல் - உருத்திரன். உழக்கு - அளவு கருவி.

(17)

385. ஆணவச் சத்தியும் ஆம்அதில் ஐவருங்
காரிய காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்து
ஆணவம் நீங்கா தவரென லாகுமே.

(ப. இ.) ஆணவ ஆற்றல் அகன்றாலும் பயிற்சி வயத்தான் ஏற்படும் வாசனையாகிய பசையாற்றலையே ஆணவச் சத்தி என்றனர். அப்பசையாற்றலகலத் தூமாயையில் தோன்றும் நிலைக்களம் ஐந்தாகும். அவற்றின்கண் வாழும் உயர்ந்த உயிரினத்தவரும் ஐவராவர். இவர்களை இயைந்தியக்கும் காரணக் கடவுளரும் ஐவராவர். இவ்விருவகையினரையும் முறையே உயிர்ப்பால் உடையான்பால் எனக் கூறுவர். உயிர்ப்பால் - அணுபக்கம். உடையான்பால் - சம்புபக்கம். இவ்வைவருள் அருளோனாகிய சதாசிவ நிலையிலுள்ள உயிர்ப்பாலார், நுகர்வுப் பசையுடையர். நுகர்வுப் பசை - போக வாசனை. அதன்பின் ஆண்டான் மெய்யாகிய ஈசுரதத்துவத்து ஆட்டுதற் பசையாகிய அதிகார மலவாசனையுடைய உயிர்ப்பாலார் உறைவர். ஆசான் மெய்யாகிய சுத்த வித்தியா


1. சிவஞ்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.