(ப. இ.) கருவாய்க் கிடக்கின்ற காலத்தும் சிவபெருமான் கழலே நினையும் கருத்துடைய திருநெறி ஒழுக்கத்தை நெகிழவிட்டேன். அல்லன். மெய்விட்டிலேன் - உடம்பினிடத்துள்ள எனது என்னும் பற்றை விட்டவன் அல்லன். விகிர்தன் - பல்வேறு திருமேனிகொள்ளும் சிவபெருமான். பொய்விட்டு - உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று செய்யும் அன்பிலாப் பொய்ச்சொல் செய்து. நானே...னடி - பின்னற் சடையினையுடைய சிவபெருமான் திருவடியினை யானே (தேடுவன்). நெய்விட்.. மாமே - நெய்விடாது எரிக்க விரும்பிய விளக்குப்போல் பயனில்லதாகும். இடிஞ்சில் - அகல்; இட ஆகுபெயராய் விளக்கைக் குறித்தது. எண்ணெய் இல்லா விளக்குப் பயன் பெறாமை போலச் சிவ நினைவு இல்லாதவரும் பயன்பெறார். (அ. சி.) இடிஞ்சில் - அகல். வறடு - மலட்டுப் பசு. (3) 487. ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்1 ஏவன செய்யும் இளங்கிளை யோனே. (ப. இ.) கருவினுள் ஆணையான் அமைத்த 'பேறு இழவு' முதலியனவும் பிறவும் ஆம். காவலன்...யோனே. சிவபெருமான் காட்டிக் காண்பவன்; அவன் திருவுள்ள ஆணை வழிப்பட்டு அவன் ஏவின செய்வோரே புத்தடியாராவர். இளங்கிளை - புத்தடிமை. (4)
17. அபாத்திரம் 488. கோல வறட்டைக் குனிந்து குளகிட்டுப் பாலைக் கறந்து பருகுவ தேயொக்கும்2 சீலமும் நோன்பும்3 இலாதவர்க் கீந்தது காலங் கழிந்த பயிரது ஆகுமே.4 (ப. இ.) தகுதியல்லாதார்க்கு ஈவது வறட்டுப் பசுவைப் பேணிப் பால் கறந்து குடிப்பதை ஒக்கும். குனிந்து - வணங்கி. வறட்டை - கன்றீனாக் கறவை. காலம் கழிந்த - பருவம் நீங்கிய. சீலம் - சரியை. நோன்பு - கிரியை. (அ. சி.) குளகு - தழை. (1)
1. காணுங். சிவஞானபோதம், 11. " பன்னியசெந். அப்பர், 6. 91 - 1. " ஞானங். 5." 26 - 3 " இளமை, " 5. 97 - 28. 2. பப்போதிப். அப்பர், 4. 5 - 6. 3. சீலமின்றி. 8. ஆனந்தமாலை, 3. 4. முன்பெலா, அப்பர், 4. 28 - 1.
|