299
 

ளாற்றலின் பேரொளி விளங்கும். பேயகம் - புகழ்ந்து பேசப்படும் இடம் என்று கூறுவாருமுளர். அப் பொருளுக்குப் பேசகம் என்பது சகரத்துக்கு யகரம் போலியாக வந்ததாகும்.

(அ. சி.) தாயகம் - சொந்த இடம். போயகமான - அகலமான. பேயகம் - பேசகம்; புகழ்ந்து பேசும் இடம்.

(53)

673. பேரொளி யாகிய பெரியஅவ் 1வேட்டையும்
பாரொளி யாகப் பதைப்பறக் கண்டவன்
தாரொளி யாகத் தரணி முழுதுமாம்
ஓரொளி யாகிய காலொளி காணுமே.

(ப. இ.) மிக்க ஒளியாகிய நெஞ்சத்தாமரையை அகஒடுக்கத்தால் பார்க்கும் சுடரொளியாகக் கண்டவன் தாரொளி...காணுமே - உலக முழுவதும் நேரொளியாகவும், ஒருங்குகாணும் ஒளியாகவும் உயிர்ப் பொளியால் காணுவன்.

(அ. சி.) பெரிய அவ் ஏடு - பெரிய இதழுள்ள தாமரை, தார் ஒளி - நேர்மையான ஒளி. கால் ஒளி - பிராணவாயுவின் ஒளி.

(54)

674. காலோ டுயிருங் கலக்கும் வகைசொல்லிற்
காலது அக்கொடி நாயகி தன்னுடன்
காலது ஐஞ்ஞூற் றொருபத்து மூன்றையுங்
காலது வேண்டிக் கொண்டஇவ் வாறே.

(ப. இ.) உயிர்ப்பினுடன் ஆவி இயைந்து இயக்கும் வகையினைச் சொல்லின், ஆலது...தன்னுடன் - எங்கும் நிறைந்த திருவருளாற்றல் நிறைவினுள், காலது....மூன்றையும் - எழுபத்தீராயிரம் நாடிகளில் பெருத்த நாடிகளாகிய ஐஞ்ஞூற்றுப் பதின்மூன்றையும் காலது... வாறே - விரவி இயங்கும் உயிர்ப்பினைத் திருவருள் தன் ஆற்றலில் அடக்கித் தன்வழிச் செலுத்தும்.

(அ. சி.) காலது 513 - பிராணவாயு வியாபிக்கும் நாடிகளின் தொகை. பெண் - சத்தி.

(55)

675. ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிர முந்நூற்றொ டைந்துள
ஆறது வாயிர மாகு மருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே.

(ப. இ.) (அலை அதுவாகும் அமிர்தத்து ஆறினுள்) அலைவீசுகின்ற அமிழ்த ஆற்றிலே (அது முதற்பொருள் ஈறு). ஆறது...டைந்துள-; ஆறது...மருவழி - (ஆயிரம் - அளவின்மை) எழுபத்தீராயிரம் நாடிகளாகும் நுண்ணிய செம்மையான வழிகளை. ஆறது...திரண்டே - நன்னெறிக்குய்யும் செவ்வி வழியாக நிலைப்பிப்பது இறைவனும் இறைவியுமாகிய அத்தனும் அன்னையும் செய்யும் ஆரருள் என்க.


1. வெட்டையும்.