364
 

871. ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
ஆமே பரங்கள் அறியா விடம்என்ப
ஆமே திருக்கூத் தடங்கிய சிற்பரம்
ஆமே சிவகதி ஆனந்த மாமே.

(ப. இ.) அகரம் சிவமாகவும், உகரம் சிவை யாகவும் ஆகும். இவை இரண்டும் சுட்டறிவுக்கு எட்டாத துணைப் பொருள்கள். ஆதலால் அறியா இடமென்ப. அறிவுருவாம் முழுமுதல் ஐந்தொழில் திருக்கூத்தடங்கிய பெரும்பொருள் ஆகும். இறவாத இன்ப நிலையமாக இலங்குவது சிவகதியேயாம். பரங்கள் மேலாம் மெய்ப்பொருள்கள். சிற்பரம் - மேலாம் அறிவுரு. சிவகதி - இன்ப நிலையம்.

(8)

872. ஆனந்த மூன்றும் அறிவிரண் டொன்றாகும்
ஆனந்தஞ் சிவாய அறிவார் பலரில்லை
ஆனந்த மோடும் அறியவல் லார்கட்கு
ஆனந்தக் கூத்தாய் அகப்படுந் தானே.1

(ப. இ.) இறவாத இன்ப நிலையம் அகர உகர மகரங்களென்னும் மூன்றுமாம். அறிவாற்றல் அறிவென அறிவு இரண்டாம். அறிவாற்றல் - ஆணை; சத்தி. அறிவு - சிவம். இவற்றுடன் யகரம் ஒன்று கூட்ட அறிவு (சிவய) மூன்றாகும். இம் மூன்றனையும் திருவருட்டுணையால் அறிவார் பலரில்லை சிலரே யாவர். இறவாத இன்பத்தினை அதனுடன் புணர்ந்து அறியவல்லார்க்கு அவ் வின்பம் ஒளியாது வெளிப்பட்டு அகப்படும் என்க. கூத்தாயகப்படுதல் - இன்பாய் நுகர்தல்.

(அ. சி.) ஆனந்தம் மூன்று - அ. உ. ம். அறிவு இரண்டு - சத்தி - சிவம். ஒன்றாகும் ஆனந்தம் சிவாய - சத்தி - சிவம் - ஆன்மா.

(9)

873. படுவ திரண்டும் பலகலை வல்லார்
படுவதோங் காரம் பஞ்சாக் கரங்கள்
படுவது சங்காரத் தாண்டவப் பத்தி
படுவது கோணம் பரந்திடும் வாறே.

(ப. இ.) இணைந்திருக்கும் அம்ச மந்திரம் (சிவ) இரண்டும் புரிவார் பல்கலை வல்லாராவர். அம்சமந்திரம் இரண்டும் அறிவும் ஆணையுமாகக் கூறலாம். அறிவே சிவம். ஆணையே சத்தி. இவ்விரண்டின் விரிவே ஓங்கார பஞ்சாக்கரங்கள். இம் முறை குறிப்பதே சங்காரத் தாண்டவம். இத் தாண்டவத்தின் முறைமையால் எல்லா இடங்களிலும் சிவப் பேறு பரவும் என்க. பரவும் - வியாபகமாகும். பத்தி - முறைமை. கோணம் - புலம்; திசை. வாறு - பேறு; சிவப்பேறு. சங்காரம் - பேரொடுக்கம்.

(அ. சி.) இரண்டும் - அம்ச மந்திரங்கள் இரண்டும். படுவது - சொல்லப்படுவது.

(10)


1. நெடிதுபோ. 12. கண்ணப்பர், 106.