373
 

முதனிலைகள் சேர்ந்து அரகர என்றாயிற்று. அதனை அரகர என்று உள்ளன்புடன் ஓதுவார்க்குத் திருவருள் துணை முன்னிற்பதால் செயற்கரிய செயலென்று ஒன்றும் இல்லை. இவ் வுண்மையினைப் பலர் உணர்ந்திலர். அரகர என்று ஓதச் சிவவுலகப் பெரும்பேற்றினராவர். அரகர என்று ஓதப் பிறப்பற்றுச் சிறப்புற்றுப்பெரு வாழ்வு வாழ்வர்.

(3)

897. எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான்மொழி பாலே.

(ப. இ.) நடுவீட்டைச் சூழ இருக்கும் எட்டுவீடும் எட்டுநிலை எனப்படும். இவ் வமைப்பில் ஒன்று உலகின் முதலாகிய ஓம் எனப்படும். ஓம் நமசிவய என்னும் ஆறெழுத்து அருமறையும், பதினான்கு உலகங்களும், ஒளியும் ஒலியும் ஆகிய எல்லாம் திருவருள் தாங்குதலினின்று தோன்றின. ஒட்டு - அமைப்பு. பான் மொழி - திருவருள்.

(அ. சி.) எட்டுநிலை - நடுவீட்டைச் சூழ இருக்கும் எட்டுவீடு. ஒட்டினில் - இந்த அமைப்பில். ஒன்று - பிரணவம்.

(4)

898. மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்டவல் லாருயிர் காக்கவல் லாரே.

(ப. இ.) சிவனும் சிவையும் பிரிப்பின்றி ஒட்டியுறையும் வழிவகையறியின், விட்ட எழுத்தாகிய 'வ' விடாத எழுத்தாகிய 'சி' இவ்விரண்டினையும் மாமுதல் என்னும் உண்மை வெளியாகும். மாமுதல் மகாகாரணம். இவ் விருபெரும் எழுத்தாகிய சிவ என்னும் செந்தமிழ்த் தனிமறையினை இடையறாது கணிக்கவல்லார் தம்முயிர் திருவடியிற் கூடிப் பேரின்பம் எய்தும் நிலையினைப் பேணவல்லாராவர். கட்டல் - இடையறாது கணித்தல். காத்தல் - பேணுதல்.

(அ. சி.) விட்ட எழுத்து - வ. விடாத எழுத்து - சி.

(5)

899. ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம்
ஆலய மாக அமர்ந்தவித் தூலம்போய்
ஆலய மாக வறிகின்ற சூக்குமம்
ஆலய மாக அமர்ந்திருந் தானே.

(ப. இ.) செந்தமிழ்த் திருவைந்தெழுத்தாலாகிய திருக்கோவிலே அம்பலவாணர் அருள் உறையுளாகும். இவ் வைந்தெழுத்துப் பருமை: நுண்மை, மீதுண்மை, முதல், மாமுதல் என ஐவகைப்படும். பருமை, நமசிவய. நுண்மை: சிவயநம மீதுண்மை: சிவயசிவ முதல்: சிவசிவ. மாமுதல்: சிவ. இவற்றுள் பருமையாகிய நமசிவய என்பதன் மேல் நுண்மையாக அறிகின்ற சிவயநம, என்னும் அதுவே திருக்கோவிலாக அமர்ந்திருந்தான் என்க. இந்