(ப. இ.) மேற்கூறிய முறையானே அமைக்கப்படும் திருவம்பலச் சக்கரத்தின்கண் நில முதல் வானம் ஈறாகக் கூறப்படும் பூதங்கள் ஐந்தினுக்கும் உரிய ல, வ, ர, ய, அ ஏற்ற இடத்து அமைத்தல் வேண்டும். (16) 910. ஆறெட் டெழுத்தின்மே லாறும் பதினாலும் 1ஏறெட் டதன்மேலே விந்துவும் நாதமுஞ் சீறிட்டு நின்று சிவாயநம வென்னக் கூறிட்டு மும்மலங் கூப்பிட்டுப் போமே. (ப. இ.) ஐம்பதெழுத்தாக அமைக்கப்படும் காலத்து உயிரினத்தில் ஆறாவதெழுத்து 'ஊ' பதினான்காவதெழுத்து 'ஒள' எட்டு என்பது அகர எழுத்தாகும். அதன்மேல் ஒளியும் ஒலியும் கணிக்குமாறு கூட்டுதல்வேண்டும். சீறிட்டு - கணிக்குமாறு கூட்டியிட்டு, 'சிவயநம' என இடையறாது கணித்துக்கொண்டிருந்தால் மும்மலங்களும் பிளவு பட்டு இன்னலுற்றுப் புலம்பியகலும். பிளவுபடுதல் - ஆற்றலடங்குதல். (17) 911. அண்ணல் இருப்ப தவளக் கரத்துளே பெண்ணினல் லாளும் பிரானக் கரத்துளே எண்ணி இருவர் இசைந்தங் கிருந்திடப் புண்ணிய வாளர் பொருளறி வார்களே.2 (ப. இ.) சிவபெருமான் இயைந்தியைக்கும் சிவையின் எழுத்தாகிய வகரத்தோடு பிரிப்பின்றி நிற்பன். சிவையும் சிவபிரான் எழுத்துடன் அவ்வாறு நிற்கும். சிவபெருமான் எழுத்து 'சி' சிவனும் சிவையுமாகிய இருவரும் ஆவியின் நடுவுள் இருத்தலான் அவ் வுயிர் திருவடியுணர்வையுணரும். அவ் வுணர்வுடையார் புண்ணியவாளர் எனவும் பொருளறிவாளர் எனவும் பேசப்பெறுவர். அதுவே 'சிவயசிவ'. இப்பெருமறையின் குறிப்பு வருமாறு: 'நாடும் நமசிவய நாப்பண்சி நாப்பண்ய கூடும் சிவயநம கூறுங்கால் - நேடும் சிவயசிவ நாப்பண் சிறப்பிருவர், சேர்வாம் சிவசிவ தாடலையாம் சேர்ப்பு.' (அ. சி.) அவளக்கரம் - சத்திபீசம். பிரானக்கரம் - சிவபீசம். (18) 912. அவ்விட்டு வைத்தங் கரவிட்டு மேல்வைத்து இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம தாய்நிற்கும் மவ்விட்டு மேலே வளியுறக் கண்டபின் தொம்மிட்டு நின்ற சுடர்க்கொழுந் தாமே. (ப. இ.) திருவருட்குறியாம் சிவலிங்கத்தின் சிறப்புச் சாக்கிய நாயனார் திருவரலாற்றினுள் அருவம் உருவம் என்னும் இரண்டற்கும்
(பாடம்) 1. ஏறிட். 2. உடையா. 8. கோயின் மூத்த திருப்பதிகம், 1.
|