(அ. சி.) கரணம் - சாதனத்துக்கு இரளி - கொன்றை. யமன் திசை - தெற்கு. மரணமிட்டு - மாரக அக்கரம் இட்டு. எட்டின் மகார மிட்டு - எட்டறைகளிலும் மகரத்தை மாறி இட்டு. வரணம் - மறைப்பு. ஐங்காயம்: சுக்கு - மிளகு - கடுகு - உள்ளி - பெருங்காயம். முரணின் - மாறாக. (81) 975. ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற் பாங்கு படவே பலாசப் பலகையிற் காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்டு ஓங்காரம் வைத்திடும் உச்சா டனத்துக்கே. (ப. இ.) வடமேற்குப் புலமாகிய வாயு மூலையில் அரி அரர் மகனாகிய ஐயனார் கோவிலில் அழகுறப் புரசுப் பலகையில் வெப்பமுள்ள கரிய தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் அமைத்துப் பூசித்தலை உச்சாடனம் ஆகிய ஏவுதல் என்ப. (அ. சி.) கோட்டம் - கோவில். காங்கு அருமேட்டில் - வெப்பமுள்ள கரிய தகட்டில். கங்கு - கந்துள்; நெருப்போடு கூடிய கரிக்கட்டி. கடு - கடுகு - கடு + கு - சிறுத்தவிடம். (82) 976. உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையிற் பச்சோலை யிற்பஞ்ச காயத்தைப் பாரித்து முச்சது ரத்தின் முதுகாட்டில் வைத்திடு வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே. (ப. இ.) நண்பகற்போதில் ஒளியுடைத்தாகிய வன்னி மூலையென்று சொல்லப்பெறும் தென்கிழக்கு மூலையில் பச்சையான பனை ஓலையில் (974) சுக்கு, கடுகு, மிளகு, உள்ளி, வெள்ளுள்ளி என்னும் ஐந்தினையும் அரைத்துப் பூசி முச்சதுரமாக அமையும் சந்திகளிலும், சுடுகாட்டிலும் புதைத்து வைத்திடுக. வைத்த பிறகு பகையை அழிக்கும் மாரணமாக அஃது அமையும். மாரணம்: ஏவலாற் செய்யுங்கொலை. வெள்ளுள்ளி நீக்கிப்பேயுள்ளி கொள்ளலுமாம். (அ. சி.) வன்னிமூலை - அக்கினிமூலை - தென்கிழக்கு பஞ்சகாயம் - ஐங்காயம் (மேலே கூறியபடி). பாரித்து - பூசி. முதுகாடு - சுடுகாடு. (83) 977. ஏய்ந்த வரிதார மேட்டின்மே லேபூசி ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்திட்டு வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக் கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே. (ப. இ.) 973-இல் ஓதியபடி மகர முதலாக வரைந்த ஐந்தெழுத்து ஏட்டின்மேல் அரிதாரமாகிய மருந்து பூசி; (அரிதாரமென்பது: கட்டியரிதாரம், காட்டரிதாரம், கனத்தீ அரிதாரம், தகட்டரிதாரம், தாளகம், பொன்னரிதாரம், மடலரிதாரம், வைப்பரிதாரம் என எண்வகைய.) அதன்மேல் அகார உகாரங்களை எழுதி, வாய்ப்புடைய வில்வ மரப்
|