(ப. இ.) எளியேனுடன் அளவளாவியருளும் அழகிய கன்னி என்னுள்ளத்துத் திகழ்ந்து தொன்றுதொட்டுக் கலந்து (புணர்ந்து) வீற்றிருந்தருளி, செவ்வியினை உணர்ந்து, உச்சித்தொளையினுள் கலந்து நிற்கும் கலைமுதல்வியாவள். செவ்வி - பரிபாகம். (அ. சி.) கலாவி - கலந்து. கலைத்தலை - சந்திரகலை அணிந்த தலை அல்லது 64 கலைகளை விரித்தவள். (37) 1088 .கலைத்தலை நெற்றியோர் கண்ணுடைக் கண்ணுள் முலைத்தலை மங்கை முயங்கி இருக்குஞ் சிலைத்தலை யாய தெரிவினை நோக்கி அலைத்தபூங் கொம்பினள் அங்கிருந் தாளே. (ப. இ.) வாலறிவாம் திருவுருவில் அறிவடையாளமாகிய நெற்றிக் கண்ணையுடையவன் சிவன். அவன் ஆருயிர்களுக்குக் கண்போன்றவன். அவன் இடப்பால் வீற்றிருந்து அருளும் முலைமங்கை திருவருளம்மை. அவளுடன் சிவன் கலந்துநிற்கின்றனன். பொன்மலையை வில்லாகக் கொண்டவன். அவனது நாட்டத்தையே அம்மை நோக்கியருளித் துவளும் அழகிய இடையினையுடையள். அவ்வம்மை உள்ளத்துறைந்தனள் கண் - கண்போன்ற சிவன். அலைத்த - துவண்ட. பொன்மலை வில்: பொன்மலையிற் பிறந்த மூங்கிலை வில்லாக உடையவன். மலை இடவாகு பெயராக மூங்கிலைக் குறிக்கும். 'இமையவில்' என்பதற்கு நச்சினார்க்கினியர் வரைந்த உரை காண்க. (38) 1089 .இருந்தனள் ஏந்திழை என்னுள்ள மேவிப் 1பொருந்திய நால்விரல் புக்கனள் புல்லித் திருந்திய தாணுவிற் சேர்ந்துடன் ஒன்றி அருந்தவ மெய்தினள் ஆதியி னாளே. (ப. இ.) முதல்வி என்னுள்ளம் பொருந்தி நால்விரல் அளவினதாகிய உயிர்ப்புடன் சேர்ந்து, மூலக்கனலை எழுப்பிப் பயிற்சியால் செம்மையுற்ற நடுநாடியிற் சேர்ந்து உடன்கலந்து இருந்தனள். அவளருளால் அருந்தவத்தை எய்துவித்தனள். அவளே ஆதி என்னும் இறைவியாவள். உயிர்ப்பு - பிராணன். தாணு - நடுநாடி; வீணாத்தண்டு. (அ. சி.) பொருந்தினள் நால்விரல் - நால்விரல் அளவுள்ள பிராண வாயு. (39) 1090 .ஆதி யனாதி யகாரணி காரணி சோதிய சோதி சுகபர சுந்தரி மாது சமாதி மனோன்மனி மங்கலி ஓதியென் னுள்ளத் துடனியைந் தாளே.2 (ப. இ.) தொடக்க நடப்பாற்றலாகிய ஆதியும், தொன்மை வனப்பாற்றலாகிய அனாதியும், தனக்கோர் காரணம் இல்லாதவளும் தான்
(பாடம்) 1. பொருந்திரு. 2. அந்தணர். திருக்குறள், 543.
|