448
 

(ப. இ.) மலர் மணம்போன்று அடங்கித்தோன்றும் சிவனும் அருளும் ஓருருவாய் ஒத்து நிற்கும் உண்மையினை உணரார். கருவுக்கு உயிராய் நின்று அக் கருவினைத் தொழிற்படுத்தியபோது எந்தையாகிய சிவபெருமான் அவ்வுயிர் தன் திருவடியைச் சேரவேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு நின்றனன். தவமிருந்து மகப்பெறுவார் பெற்ற ஞான்றே தக்கமணவாளரை நாடுதல் இதற்கு ஒப்பாகும்.

(அ. சி.) மரு - வாசனை. உரு ஒத்து - உருவ வேறுபாடு இல்லாமல். கருஒத்து - கருவிலேயே உள்புகுந்து. திரு ஒத்த - முத்தி அடையவேண்டும் என்ற.

(13)

1114 .சிந்தையின் உள்ளே திரியுஞ் சிவசத்தி
விந்துவும் நாதமு மாயே விரிந்தனள்
சந்திர பூமி சடாதரி சாத்தவி
அந்தமொ டாதிய தாம்வண்ணத் தாளே.1

(ப. இ.) திருவருள் சிவபெருமான் திருவுள்ளத்து அன்பாகிய விழைவாற்றலாய் ஒருபடித்தாய்த் திகழ்வள். ஒளியும் ஓசையுமாகிய விந்து நாதங்களைத் தொழிற்படுத்தி அவை தானாகவே நின்றனள். திங்கள் மண்டிலத்தும் வீற்றிருப்பள். திருச்சடையை உடையவள். தலைமைப் பண்பாம் அறிவாகவே அமைந்தவள். முடிவும் முதலுமாய் உலகம் விளங்குதற்கு நிலைக்களமாகவுள்ளவள். சடாதரி - திருச்சடையை உடையவள். சாத்தவி - தலைக்குணம் வாய்ந்தவள்.

(அ. சி.) சடாதரி - சடைய உடையவள். சாத்தவி - சாத்மீக குணம் உடையவள்.

(14)

1115 .ஆறி யிருந்த அமுத பயோதரி
மாறி யிருந்த வழியறி வாரில்லை
தேறி யிருந்துநல் தீபத் தொளியுடன்
ஊறி யிருந்தனள் உள்ளுடை யார்க்கே.

(ப. இ.) திருவடியுணர்வு நிறைந்து அடங்கியிருந்த திருமுலையை உடையவள். சிவனும் சிவையும் பொருளால் ஒன்றாய், தோற்றத்தால் பிரிப்பில்லாத வேறுபாடற்ற இரண்டாய் விளங்கும் நிலைமையை அறிபவர் இல்லை. திருவடியே நிலைபேறான புகலென்று தெளிந்திருந்து மெய்யுணர்வு விளக்கமாய்த் திகழும் ஆருயிர்கட்குப் பேரின்பமாம் இன்னமிழ்தாய் அதுவும் வற்றாவூற்றாய் அருளம்மை வீற்றிருப்பள்.

(அ. சி.) ஆறி இருந்த - சிவத்துள் அடங்கி இருந்த. அமுத பயோதரி - அமிழ்தக் கடல் போன்றவள்.

(15)

1116 .உடையவன் அங்கி உருத்திர சோதி
விடையவன் ஏறி விளங்கி யிருக்குங்
கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே.


1. அவனவள். சிவஞானபோதம், 1.