502
 

(ப. இ.) ஐந்தெழுத்தும் தோன்றுவதற்கிடனாம் நாதமாகிய ஓசை வழியே வழியாகப் போகும் மேலிடமாகிய உச்சித்தொளைவழியே சென்றால் நாம் நினைத்த எச்செயலையும் மறை ஆற்றலால் செய்தலும் ஆகும். நிலவுலகில் ஒருவரும் பகையாகார். அப்பார் மேல் எனும் பாடத்திற்கு, துறக்கவுலகம் முதலிய உலகங்களிலும் பகையில்லை என்க.

1208. பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்
நகையில்லை நாணாளும் நன்மைக ளாகும்
வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை
தகையில்லை தானுஞ் சலமது வாமே.1

(ப. இ.) சாம்பவி மந்திரத்தை முறையாக உருவேற்றியவர்க்கு எத்திறத்தும், என்றும், பகை உண்டாகாது; யாண்டும் பிறரால் எள்ளப்படும் தன்மையும் நேராது; எந்நாளும் பெருநன்மைகளெல்லாம் பெருகும்; எக்காலத்தும் தீவினைகள் உண்டாகா; வினைசெயற்கண் நிகழும் இடையூறாகிய விருத்தமும் எய்தா; எவ்வகைத் தடையும் எங்கும் நேரா. உருவேற்றியவர் தாமும் பலரறியும் நறுமணம் போன்று மேன்மையுறுவர். சலம்-மணம். சாம்பவி மந்திரம் என்பது திருவைந்தெழுத்தே.

(அ. சி.) தகைவு - தடை. சலமதுவாம் - எளிதாம்.

(8)

1281. ஆரும் உரைசெய்ய லாமஞ் செழுத்தாலே
யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்
பாரும் விசும்பும் பகலு மதியதி
ஊனும் உயிரும் உணர்வது வாமே.2

(ப. இ.) சாம்பவி மந்திரமாம் அஞ்செழுத்தை யாரும் ஓதலாம். அத்திருவைந்தெழுத்து யாரும் தம்மறிவால் அறியவொண்ணாத பேரின்ப உருவமாகும். அதுவே, மண்ணும், விண்ணும் (945) ஞாயிறும், திங்களும், சிறந்த உடலும், உயிரும், உணர்வுமாக விரவிநிற்கும் அதிமிகுந்த; சிறந்த. திருவைந்தெழுத்து நமசிவய'-இத்தமிழ்மறையினைச் செந்நெறிச் செல்வர்கள் அனைவர்களும் ஓதுதலாம். இருபாலாரும் ஓதலாம். 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' (2066) என்பது போல் - மந்திரமும் ஒன்றே 'ஓதுசெயற் பாவுடலாம் உய்க்கு மறையுயிராம், தீதில் 'சிவயநம செப்பு'. என்பதே 'செந்தமிழர் தெய்வமறை நாவர்' சீர்ப்பாடு.

(9)

1. தக்கா. திருக்குறள், 446.2. அஞ்செழுத்தே. உண்மை விளக்கம், 45.